'துாங்காத விழிகள் ரெண்டு...'
திரைப்பட பாடகி சித்ரா அந்த பாடலை பாடியபோது, பகல் முழுவதும் அக்னி நட்சத்திரத்தில் தகித்த, அத்தனை பேரும் குளிர்ந்து போனார்கள்.
'சித்ராம்மா...சித்ராம்மா...என ஒன்ஸ்மோர்' என கூக்குரலிட்டனர். மீண்டும் மீண்டும் பாடுவதாக இருந்தால், அவரது எல்லா பாடல்களையும் குறித்த நேரத்துக்குள் பாடி முடிக்க முடியாது என்பதால், மன்னிப்பு கேட்டனர் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள்.
கோவை அருகே குரும்பபாளையம், தனியார் பொறியியல் கல்லூரியில், நடந்த திரைஇசை நிகழ்ச்சியில்தான் ரசிகர்களை, இன்னும் இளமையாகவே இருக்கும் தன் குரலால் கட்டிப்போட்டார் சித்ரா.
'குழலூதும் கண்ணனுக்கு, 'மலர்களே, மலர்களே, இது என்ன கனவா...' இப்படி பல பாடல்களை பாடினார் சித்ரா. ரசிகர்கள் கைத்தட்டி ரசித்ததோடு, சில பாடல்களுக்கு குழுவாக நடனமும் ஆடினர்.
''உங்கள் கைதட்டலே எங்களுக்கு தெம்பு தரும், என்று எப்போதும் போல் சின்னதாக பேசி, தனது பாடல்களுக்கு பெரிதாக அப்ளாஸ் பெற்று விடைபெற்றார் சித்ரா.