நாகர்கோவில் ஆரிய பவனுக்கு, இது அரை நுாற்றாண்டைக் கடந்த விருந்தோம்பல் பாரம்பரியம். 1968ல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல் கிளை துவங்கியது முதல், சுவையும் உபசரிப்பும் மக்கள் மனதில் தித்திப்பாய் பதிந்துபோக, ஆலமரமாய் கிளை விரித்தது.
2018ல் சிங்கப்பூரில் துவக்கப்பட்ட கிளை, அந்நாட்டின் முதல் 500 நிறுவனங்களில் ஒன்றாக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறது.
கோவையில் 2022 மே மாதம், அவிநாசி ரோட்டில் 15,000 சதுர அடி பரப்பில் மெகா விருந்தரங்கமாக திறக்கப்பட்டது. மிக விரைவிலேயே, நகரின் முக்கிய அடையாளமாக மாறியிருக்கிறது நாகர்கோவில் ஆரியபவன்.
தென் மாநில, வட மாநில உணவு, செட்டிநாடு, சைனீஸ், தந்துாரி, தாய் என வெவ்வேறு வகைகளில், தினம் ஒன்றாய் ருசித்தால்கூட, ஆண்டு முழுதும் ருசிக்க, இங்கே 350க்கும் மேற்பட்ட உணவு வகைகள் அன்லிமிட்டெட் ஆக அணிவகுக்கின்றன. இது பிரதான உணவுவகைகளின் எண்ணிக்கைதான். திணறடிக்கும் வகை; திகட்டாத சுவை. இதுதவிர, இனிப்பு வகைகள் தனி.
காலையில் சிறுதானியம், மதியம் எண்ணிலடங்கா வகைகள், மாலை 4:00 முதல் 6:00 வரை வாழைப்பூ வடை, கீரை வடை, மைசூர் போண்டா, ஒரு ஸ்பெஷல் ஹல்வா மணமணக்கும் காபியுடன் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்பெஷல் காம்போ கொடுத்து திணறடிக்கின்றனர்.
அருமையான சுவை ஒருபக்கம் எனில், இன்னொரு பக்கம் பணியாளர்களின் அன்பான உபசரிப்பு அசர வைக்கிறது.
'நேர்த்தியான பணியாளர்கள், 360 பேர் ஒரே சமயத்தில் உணவருந்தும் வசதி, நெரிசல் பற்றிய கவலையின்றி, 150 கார்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் என, நிம்மதியாக உணவருந்தும் சூழலுக்கு உத்தரவாதம் தருகிறோம்' என்கின்றனர் ஓட்டல் நிர்வாகத்தினர்.
குழந்தைகளுடன், குடும்பத்துடன், நண்பர்களுடன் வயிறை காலியாக கொண்டு போனால், மனதை நிறைத்து அனுப்புகிறார்கள்.
-நாகர்கோவில் ஆரியபவன்,
அவிநாசி ரோடு, பீளமேடு.
0422 2609999/ 89031 64444.