சென்னை, : நாகூரில் நடக்கும் திருவிழாவையொட்டி, தாம்பரத்தில் இருந்து காரைக்காலுக்கு, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணை:
வரும், 21ம் தேதி காலை 8:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், கடலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் வழியாக, மாலை 3:50 மணிக்கு காரைக்கால் சென்றடையும்
வரும், 22ம் தேதி காரைக்காலில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார் வழியாக மதியம் 1:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.