மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், சுற்றுலாவை மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு இன்றி, இத்திட்டங்கள் சீரழிகின்றன.
இந்தியன் ஆயில் நிறுவனம், 2019ல், சமூக பொறுப்பு திட்டத்தில், மாமல்லபுரம் பேரூராட்சிக்கு, 8 லட்சம் ரூபாயை வழங்கியது. பேரூராட்சி நிர்வாகம்.
இதில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், கடற்கரை சாலை, புஷ்கரணி திருக்குளம் முகப்பில், அலங்கார தொங்கு தோட்டம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில், 6 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பறையும் அமைக்கப்பட்டது.
துவக்கத்தில், தொங்கு தோட்டத்தை பராமரித்து, பசுமை படர்ந்து, பயணியரை கவர்ந்தது. நாளடைவில், பராமரிக்காமல் கருகி, சீரழிந்தது.
கழிப்பறையும், சில ஆண்டுகளாக பயன்பட்டது.
ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு இடையூறாக உள்ளதாக, இதை அகற்ற முடிவெடுத்து, தற்போது மூடப்பட்டுள்ளது. இதை இடிக்கவும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொங்கு தோட்டத்தையாவது பராமரிக்க, ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.