விழுப்புரம் : விழுப்புரம் அரசு கல்லுாரியில் முதுகலை பட்ட மாணவி மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதினார்.
விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் யுவஸ்ரீ, 22; விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், எம்.எஸ்.சி., படித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவி யுவஸ்ரீக்கும், வளவனுாரை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு, வளவனுாரில் திருமணம் நடந்தது.
கல்லுாரியில் ஆண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், மணப்பெண் யுவஸ்ரீக்கு, முதுகலை கணினி பிரிவில், தமிழ் பாடப்பிரிவு தேர்வு நேற்று எழுத வேண்டும். மண்டபத்தில் திருமணம் முடிந்த நிலையில், மணமகனுடன் காலை 9:30 மணிக்கு, மணக்கோலத்தில் யுவஸ்ரீ கல்லுாரிக்கு வந்து, தேர்வு எழுதினார். அவர்களை ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.