குளித்தலை: குளித்தலை அடுத்த, பண்ணப்பட்டி பஞ்., கோவில்பட்டியில் விநாயகர், பகவதியம்மன், செடல் மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு திருப் பணிகள் செய்து, கும்பாபி ேஷகம் செய்வதற்கு கிராம மக்கள், முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். கடந்த, 7ல், காவிரி நதியில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, கோவிலில் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து ஹோமங்கள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி விநாயகர், பகவதியம்மன், செடல் மாரியம்மன் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கோபூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.