குளித்தலை: கூடலுார் பஞ்., குப்பமேட்டுப்பட்டியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.பஞ்., தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி சந்திரன், யூனியன் கவுன்சிலர் சுகந்தி சசிகுமார், நங்கவரம் டவுன் பஞ்., துணைத்தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ., மாணிக்கம் திறந்துவைத்து, அரசின் சாதனைகள் குறித்து பேசினார். மாஜி எம்.எல்.ஏ., ராமர், அவைத்தலைவர் பொன்னம்பலம், யூனியன் அலுவலர்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலர், தி.மு.க.,பொறுப்பாளர்கள், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.