ஈரோடு வ.உ.சி., பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், 700க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை விற்பனை காய்கறி, பழக்கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக, காய்கறி வரத்து குறைந்தே காணப்பட்டது. நேற்று,75 டன் மட்டுமே வரத்தானது. அதேசமயம் திருமண முகூர்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடந்து வருவதால் காய்கறி விலை உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் ஒரு கிலோ தக்காளி, 20 ரூபாயில் இருந்து, 35 ரூபாயானது. மார்க்கெட்டுக்கு தினமும், 7,000 பெட்டி தக்காளி வரத்தாகும். நேற்று, 3,000 பெட்டி மட்டுமே வரத்தானது.அதுபோல, ஒரு கிலோ பீன்ஸ், 80ல் இருந்து, 100 ரூபாய், முருங்கைக்காய், 70 ல் இருந்து, 130 ரூபாய், வெண்டைக்காய், 25ல் இருந்து, 40 ரூபாய், பச்சை பட்டாணி ஒரு கிலோ, 250 ரூபாய், பச்சை மிளகாய், 70ல் இருந்து, 100 ரூபாய் என உயர்ந்தது.
ஒரு கிலோ சுரைக்காய் - 15 ரூபாய், இஞ்சி - 220, கேரட்-20, கோவக்காய்-30, மாங்காய்-20, சின்ன வெங்காயம் - 70 முதல், 80, பெரிய வெங்காயம் - 30, கத்தரிக்காய்-60, புடலை - 30, பீர்க்கன்-60, முள்ளங்கி-40, பாவைக்காய்-60, கருப்பு அவரை-110, பட்ட அவரை-80, குடை மிளகாய்-70, கொத்தவரங்காய்-30 ரூபாய் வரை விற்பனையானது.