ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தீவன அபிவிருத்தி திட்டத்தில், 150 விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவி வழங்கப்படுகிறது.
பயனாளிகள் குறைந்தது, 2 அலகு கால்நடைகளுடன் (2 பசு, 2 எருமை, 20 ஆடுகள்), 0.50 ஏக்கர் நிலத்தில் தீவன சாகுபடி செய்ய வேண்டும். கடந்த, 10 ஆண்டில் அரசு திட்டத்தில் பயன் பெற்றிருக்கக்கூடாது. கருவி விலையில், 50 சதவீதம் செலுத்த வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் வரும், 20க்குள் அந்தந்த பகுதி கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் வழங்கலாம். விபரங்களுக்கு, 94450 32515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.