ஈரோடு; ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.,யில் பொறியியல் எலக்ட்ரிஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், ஏ.சி., மெக்கானிக், பொறியியல் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டட வரைவாளர், இன்டஸ்டரி 4.00 திட்டத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் இல்லை. கூடுதல் விபரம் அறிய, 0424 2275244, 2270044 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.