பவானிசாகர்: பவானிசாகர் அருகே தயிர்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி வெங்கட்ராமன், 46; நேற்று முன்தினம் கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான பைக் மாயமானது. இதுகுறித்த புகாரின்படி போலீசார் தேடி வந்தனர். பண்ணாரி சாலையில் காராச்சிக்கொரை மேடு பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில், ஹெல்மெட் அணிந்த ஆசாமி, வெங்கட்ராமன் பைக்கை ஓட்டி செல்வது தெரிந்தது. இதன் அடிப்படையில், களவாணியை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.4.34 லட்சத்துக்கு
கொப்பரை விற்பனை
ஈரோடு: அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 151 மூட்டை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 76.40 ரூபாய் முதல், 77.48 ரூபாய்; இரண்டாம் தரம், 55.19 ரூபாய் முதல், 74.36 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6,366 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 4.34 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
ரூ.87.56 லட்சத்துக்கு எள் விற்பனை
சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 833 மூட்டை வரத்தானது. இதில் கறுப்பு ரகம் கிலோ, 136.15 ரூபாய் முதல், 150.90 ரூபாய்; சிவப்பு எள், 123.40 ரூபாய் முதல், 154.90 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 62,158 கிலோ எடையுள்ள எள், 87.56 லட்சம் ரூபாய்க்கு விற்றது.