மதுராந்தகம், மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில், 48 தனியார் பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு, உத்திரமேரூர், வந்தவாசி, சூணாம்பேடு, சித்தாமூர், செய்யூர், வேடந்தாங்கல், லத்துார், அச்சிறுபாக்கம், எல்.எண்டத்துார், பவுஞ்சூர், கூவத்துார், தச்சூர், எலப்பாக்கம், ராமாபுரம், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு, 5,000க்கும் மேற்பட்ட பேருந்து பயணியர் வந்து செல்லும் பேருந்து நிலையம் ஆகும்.
2022- - 23ம் நிதி ஆண்டில், மதுராந்தகம் நகராட்சி சார்பாக, 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆண்-, பெண் கழிப்பறை கட்டப்பட்டது.
அனைத்து பணிகளும் முடிவுற்று திறக்கப்படாமல் உள்ளது.
பள்ளி, கல்லுாரிகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிப்பறை திறக்கப்படாமல் பயனின்றி உள்ளது.
எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக, பொதுக் கழிப்பிடத்தை திறந்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.