மதுராந்தகம், படாளம் அருகே கள்ளபிராண்புரம் பகுதியில், மின் ஒயர்களுக்கு அருகே, காய்ந்த பனைமரம் ஆபத்தான நிலையில் உள்ளது.
சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கள்ளபிராண்புரம் பகுதியில், மின்சாரம் செல்லும் மின் ஒயர்களுக்கு அருகே, நுனிப் பகுதியில் ஓலை குருத்து இன்றி, காய்ந்த போன நிலையில் பனை மரம் உள்ளது. மூன்று பக்கமும், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் செல்கிறது.
மேலும், மின்கம்பங்களை விட பனை மரம் உயரம் என்பதால், கோடைக் காற்றினில் பலமின்றி ஆடுவதால், மின் ஒயர்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பனை மரம் விழுந்தால், மூன்று பக்கமும் உள்ள மின் ஒயர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பக்கம் விழுந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின்வாரியத் துறையினர், பனை மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.