திருப்போரூர், திருக்கழுக்குன்றம் - -பி.வி.களத்துார் இடையே 10 கி.மீ., துாரம் உள்ளது.
இதில், பொன்பதிர்கூடம், சாலுார் அருகே 1.5 கி.மீ., சாலை வனப்பகுதியில் உள்ளது.
வனத்துறை அனுமதி கிடைக்காததால் இந்தசாலை சீரமைக்க முடியாமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது.
இதனால், திருக்கழுக்குன்றம், நரப்பாக்கம், எடையூர், சாலுார், பொன்பதிர்கூடம், பி.வி.களத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
வனப்பகுதி சார்ந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, வலியுறுத்தி வருகிறார்.
அதன் நடவடிக்கையாக பல்வேறு வனத்துறை சாலைகள் சீரமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மேற்கண்ட திருக்கழுக்குன்றம் - -பி.வி.களத்துார் இடையே உள்ள 1.5 கி.மீ., வனத்துறை சாலை சீரமைக்க எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, வனத்துறை ஆய்வு செய்து சாலையை சீரமைக்க அனுமதித்துள்ளது.