தீர்மான நகலை துாக்கி வீசிய கவுன்சிலர்கள் சோழிங்கநல்லுார் மண்டல கூட்டத்தில் பரபரப்பு
Added : ஜூன் 11, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டல கூட்டம், உதவி கமிஷனர் ராஜசேகர் முன்னிலையில், மண்டல குழு தலைவர் மதிழயகன் தலைமையில் நடந்தது. ஏழு கவுன்சிலர்கள், துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் 7 ஏக்கர் இடத்தில், விளையாட்டு மைதானம் அமைக்க, ஊராட்சியாக இருந்தபோதே தீர்மானம் நிறைவேற்றியது. இன்னும் ஏன் விளையாட்டு மைதானம் அமைக்கவில்லை.

உத்தண்டியில், சாலையை தரமில்லாமல் அமைத்த, ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

பனையூர், நயினார்குப்பத்தில், 'மாண்டஸ்' புயலில் சேதமடைந்த சாலையை எப்போது சீரமைப்பீர்கள்?

மண்டலத்தில் உள்ள 39 பூங்காக்களை பராமரிக்க, 15 நாட்களுக்கு முன் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. வார்டு குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தானே, ஒப்பந்தம் விட வேண்டும்.

ஒப்பந்தம் விட்டபின், ஏன் தீர்மானம் கொண்டு வந்தீர்கள். இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது. - அப்போது, அதன் தீர்மான நகலை, கவுன்சிலர்கள் துாக்கி வீசினர்.

வார்டு பொறியாளர்கள், மார்ச் மாதமே மதிப்பீடு தயாரித்தும், இதுவரை தீர்மானம் நிறைவேற்றவில்லை.

இவ்வாறு, கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மண்டல அதிகாரி ராஜசேகர், ''இனிமேல் இப்படி நடக்காது,'' என்றார். இதற்கு, 'காலதாமதமாகும் ஒவ்வொரு முறையும், நடக்காது, மறந்து போச்சு என பேசுவது நியாயமா' என, கவுன்சிலர்கள் கேட்டனர். தொடர்ந்து, பூங்கா பராமரிப்பு தவிர, இதர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



காலதாமதம் ஏன்?

மண்டல கூட்டம், 10ம் தேதிக்குள் நடக்கும். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், 20ம் தேதிக்குள், ரிப்பன் மாளிகைக்கு அனுப்பப்படும். அங்கு, மாத இறுதியில் நடக்கும் மன்ற கூட்டத்தில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஆனால், ஏப்., மாதம் நடந்த கூட்ட தீர்மானத்தை, அம்மாதம் அனுப்பவில்லை. இதனால், ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலையில் நடக்க வேண்டிய பல பணிகள் பாதிக்கப்பட்டன. வார்டு பொறியாளர்கள், மேம்பாட்டு பணிக்காக, மதிப்பீடு தயாரித்த பல கோப்புகள், மண்டல அதிகாரி அறையில் கிடப்பில் போடுவதால், இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாக கவுன்சிலர்கள், சில வார்டுகளின் பொறியாளர்கள் கூறினர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X