உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- - பழையசீவரம் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
இப்பகுதியில் மேம்பாலம் கனரக வாகனங்களால் நெரிசலாக இருப்பதோடு, மண் புழுதி பறக்கிறது.
மேலும், மேம்பாலம் பழுது நீக்குதல், சாலை சீரமைத்தல் உள்ளிட்ட சமயங்களில், இத்தரைப்பாலம் மாற்று வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பருவ மழைக் காலத்தில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, இந்த தரைப்பாலம் உடைந்து அதன் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால், தரைப்பால போக்குவரத்து நீண்ட காலமாக துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சிதிலமடைந்து காணப்படும் திருமுக்கூடல் பாலாற்று தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என, அப் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.