தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஒகேனக்கல்லில், 70.6 மி.மீ., மழை பெய்தது.
தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், ஒரு வாரத்துக்கு மேல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை, 6:00 மணி வரை, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஒகேனக்கல்லில், 70.6 மி.மீ., மழை பெய்தது. பாலக்கோட்டில், 69.2, மாரண்டஹள்ளியில், 33, பென்னாகரத்தில், 25 என, மொத்தம், 197.8 மி.மீ., மழையளவு பதிவானது. மாவட்டத்தின் மொத்த சராசரி பதிவாக, 21.98 மி.மீ., பதிவாகியுள்ளது.