திண்டிவனம், : திண்டிவனம் அருகே நெய்குப்பி கிராமத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேற்கு ஒன்றிய அ.தி.முக., சார்பில், நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் பன்னீர், எம்.ஜி.ஆர்.இளைஞரணி பூபாலன், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், சீனுவாசன், முருகானந்தம், ராஜாராம், பன்னீர், ஜெகதீசன், பெமாள், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.