ரூ. 53 லட்சம் பணம் மோசடி: தம்பதிகள் உட்பட 3 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2011
09:14

பெரம்பலூர்: 53 லட்சம் ரூபாய் மதிப்பில் பண மோசடியில் ஈடுபட்ட தம்பதிகள் உட்பட மூன்று பேரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். அரியலூரை சேர்ந்தவர் கதிரவன் மனைவி சுமதி (46). இவர் அரியலூரில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வருவதுடன் பங்கு சந்தை வணிகமும் செய்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு சுமதிக்கு பங்கு சந்தை வணிகத்தில் பாண்டிச்சேரி ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பழமலை மகன் சதீஸ்குமார் (38) உதவி செய்ததார்.இதைத்தொடர்ந்து 2010ல் பங்கு சந்தை வணிகத்தில் சரிவு ஏற்பட்டதால் சதீஸ்குமார் வாட்டர் பிளாண்ட் அமைக்க தனக்கு வட்டிக்கு பணம் தரும்படி சுமதியிடம் கேட்டார். சுமதி 55 லட்சம் ரூபாய் வரை பல தவணைகளில் வட்டிக்கு சதீஸ்குமாருக்கு பணம் கொடுத்தார். இதற்கு சதீஸ்குமாரின் மனைவி திவ்யா (33) மற்றும் பாண்டிச்சேரி ஆராவில் சாந்தி காலனி பகுதியை சேர்ந்த கோவிந்தபிள்ளை மகன் லெட்சுமணன் (40) என்பவரும் உடந்தையாக இருந்தனர்.இதன் பின்னர் ரூ. 2.50 லட்சத்தை சதீஸ்குமார் சுமதியிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார். மீதியுள்ள பணம் மற்றும் அதற்கான வட்டியை சுமதி கேட்டபோது சதீஸ்குமார், லெட்சுமணனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய்க்கு ö கொடுத்துள்ளார். ஆனால் அந்த ö பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பணத்தை திருப்பி தருமாறு சுமதி, சதீஸ்குமாரிடம் கேட்டபோது சதீஸ்குமார் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சுமதி பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து சதீஸ்குமார், திவ்யா, லெட்சுமணன் ஆகிய மூவரையும் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai ,இந்தியா
06-டிச-201113:00:06 IST Report Abuse
krishna இதுபோல ஏமாற்றுபவர்களுக்கு கடும்மைய்யான தண்டனை தார் வேண்டும்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X