கை கொடுத்தால் நல்லது | கை கொடுத்தால் நல்லது | நீலகிரி செய்திகள் | Dinamalar
கை கொடுத்தால் நல்லது
Added : டிச 12, 2011 | |
Advertisement
 

பந்தலூர் : பந்தலூர் கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பரங்கி புண் நோய் ஆய்வின் போது பொதுமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பந்தலூர் அருகே கப்பாலா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று முதல் 17ம் தேதி வரை, பரங்கி புண் நோய் குறித்த ஆய்வு நடத்தப்பட உள்ளது.
ஆய்வுகளுக்காக, வீடுகளுக்கு வரும் சுகாதாரத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, விபரங்களை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இந்து முன்னணியினர் கைது
ஊட்டி :
ஊட்டியில், அரசுப் பள்ளி ஆசிரியரை பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி மேல்கோடப்பமந்து அரசுப் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவன் வினிஸ், சபரி மலைக்கு மாலை அணிந்து வந்ததை கண்டு, பள்ளி ஆசிரியை, மனம் புண்படும்படியாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து முன்னணியினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர், நேற்று ஊட்டி ஏ.டி.சி., சுதந்திர திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X