செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் அதிகரிப்பு : நடவு செய்த விவசாயிகள் விரக்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2011
01:57

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி பகுதியில், இடைக்கனு புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு நடவு செய்த விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். சேலம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், கடந்த காலங்களில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடி செலவு அதிகரிப்பு,நோய் தாக்குதல், மானிய உதவிகள் கிடைக்காமை ஆகிய காரணங்களால், நடப்பாண்டில், செங்கரும்பு சாகுபடி பரப்பு, 10 ஏக்கருக்கும் கீழ் குறைந்துள்ளது. குறைந்த பரப்பில் நடவு செய்யப்பட்ட கரும்பிலும் இடைகனு புழு நோய் தாக்கி, விளைச்சல் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். நாழிக்கல்பட்டி விவசாயி பெருமாள் கூறியதாவது: ஆண்டுதோறும் சித்திரை மாதம் செங்கரும்பு நடவு செய்து, மார்கழி மாதம் முதல் அறுவடை செய்யப்படும். விதை கரும்பு, களை பறித்தல், உரம், மருந்து என, ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். நடவு செய்த, ஒன்பது மாதத்தில் குறைந்தபட்சம் ஆறு அடி உயரத்திற்கு கரும்பு வளர்ச்சி இருக்கும். தற்போது, இடை கனு புழு தாக்கியதால், நான்கு அடி உயரம் மட்டுமே கரும்பு வளர்ந்துள்ளது. அடிபகுதியில் குண்டாக இருக்கும் கரும்பு மேல் பகுதி சிறிதாகி, குருத்து உடைந்து விடுகிறது. நோய் தாக்கியதால், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மருந்து, உரம் என, செலவு அதிகரித்துள்ளது. செங்கரும்பு நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. செங்கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு, அரசு மானிய உதவிகள் ஏதும் வழங்குவதில்லை. அதனால், செங்கரும்பு பயிர் செய்வதை கைவிட்டு, ஆலை கரும்பு நடவு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். பனமரத்துப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிக்குமார் கூறியதாவது: செங்கரும்பு சோகை தவறாமல் உரித்து வந்தால், நோய் தாக்குதல் குறையும். சத்து குறைவு காரணமாக, கரும்பு போதிய வளர்ச்சி இன்றி இருக்கும். இடைகனு புழு தாக்கிய வயலில், டிரைக்கோ கிரம்மா என்ற ஓட்டுண்ணியை விட வேண்டும். இந்த ஒட்டுண்ணி, கரும்பில் இருக்கும் புழுவை சாப்பிடுவதால், நோய் கட்டுப்படுத்தப்படும்.
ஒரு இடை கனு புழு, 300 பூச்சிகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். பூச்சிகளை தடுக்க, கரும்பு வயலில் இனக்கவர்ச்சி பொறி அமைக்கலாம். வயலில் தொடர்ந்து ஒரே வகை பயிர்கள் பயிரிடாமல், சுழற்சி முறையில் மாற்று பயிர் பயிரிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X