ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி, நில மீட்பு
இயக்கம் சார்பில், 2012 பெண்கள் கலந்து கொள்ளும் பால் குட ஊர்வலம்
நடக்கிறது.
பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் கூறியதாவது:
ஆக்கிரமிப்பில் உள்ள ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி,
பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள்
நடத்தப்பட்டது.
தற்போது, பன்னீர் செல்வம் பார்க்கில் மேம்பாலம் கட்டும்
அரசின் திட்டத்தை கைவிட கோரியும், மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்கவும்,
அரசு கெஜட்டில் வெளியான, 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றவும்,
மாரியம்மனுக்கு பால் குடம் அபிஷேகம் நடத்த உள்ளது.ஃபிப்., 2ம் தேதி கோட்டை
ஈஸ்வரன் கோவிலில் துவங்கும், பால் குடம் ஊர்வலத்தில், 2,012 பெண்கள்
பங்கேற்கின்றனர். முக்கிய வீதிகள் வழியாக வரும் ஊர்வலம், பெரிய மாரியம்மன்
கோவிலை வந்தடையும்.இது தொடர்பாக, இன்று பெருந்துறை ரோடு, "பத்மம்'
ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டமும், நாளை மாலை 5 மணிக்கு ஹோட்டல் சிவரஞ்சனியில்,
ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மகளிர் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.