ஈரோடு: கேரள அரசை கண்டித்து, தமிழ்நாடு வி.ஏ.ஓ.க்கள் சங்கம், ஆர்.ஐ.,க்கள் சங்கம், அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் உண்ணாவிரதம் நடந்தது.முல்லை பெரியாறு அணை பிரச்னையில், தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் கேரள அரசை கண்டித்தும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை ஆதரித்தும், உண்ணாவிரதம் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்தாஸ் தலைமை வகித்தார். பொருளாளர் மாடசாமி, செயலாளர் உத்தாண்டி வேலாயுதம், மாவட்ட துணை செயலாளர் சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.