படப்பிடிப்புக்காக மக்களை வதைத்த போலீஸார் பல மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2012
01:21

ஈரோடு : ஈரோடு காளை மாட்டு சிலையில் சாலை விபத்து விழிப்புணர்வு குறித்த ஷூட்டிங் நேற்று நடந்தது. நகரின் மைய பகுதியில் நடந்த திடீர் ஷூட்டிங்கால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.
சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் படப்பிடிப்பு பணி, ஈரோடு, காளை மாட்டு சிலை சிக்னல் பகுதியில், "உயிர்' அமைப்பின் சார்பில் நடந்தது. முன்னதாக, அப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்ற ஒரு தம்பதி, சாலை விபத்தில் சிக்கி பலியாகி கிடப்பது போன்ற காட்சியை, "உயிர்' அமைப்பை சேர்ந்த நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்பது போன்று, "108' ஆம்புலன்ஸ் ஊழியர்களும் நடித்தனர்.
நேற்று காலை 11.30க்கு நடந்த படப்பிடிப்புக்காக, கொல்லம்பாளையம், வெள்ளோடு, சென்னிமலையில் இருந்து, பி.எஸ்.பார்க் வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் போலீஸார் தடுத்து நிறுத்தினர். விபத்தில் இருவர் சிக்கி உயிரிழந்து கிடப்பது போல சித்தரிக்கப்பட்டதால், வாகனவோட்டிகளிடையே பீதி தொற்றிக் கொண்டது. பலரும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டு, ரோட்டில் விழுந்த கிடந்தவர்களை பார்க்கச் சென்ற விட்டனர்.
காளைமாட்டு சிலை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனவோட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். படப்பிடிப்புக்காக, "108' ஆம்புலன்ஸ் ஒன்றை போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். அதே நேரம், நோயாளியுடன் வந்த மற்றொரு, "108' ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது. கடும் போராட்டத்துக்கு பின் போலீஸார், ஆம்புலன்ஸை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாகனவோட்டிகள் சிலர் கூறுகையில், "விபத்து குறித்து விழிப்புணர்வுக்கு ஷூட்டிங் நடத்த, ஈரோட்டில் எத்தனையோ இடங்கள் உள்ளது. நகரின் முக்கிய பகுதியான காளை மாட்டு சிலையில், போலீஸாரின் அனுமதியோடு, ஷூட்டிங்கை நடத்தி, போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸையும் பயன்படுத்தி உள்ளனர். திடீரென நடந்த ஷூட்டிங், பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது,' என்றனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகில், குமலன்குட்டையில் இதுபோல் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக, குறும்பட தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் படப்பிடிப்பை நடத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X