கர்ப்பிணி மாயம்:போலீசார் விசாரணை | கர்ப்பிணி மாயம்:போலீசார் விசாரணை Dinamalar
கர்ப்பிணி மாயம்:போலீசார் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
01:14

சேலையூர் : கர்ப்பிணி மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரத்தைச் சேர்ந்தவர் பிரபுராஜ். பேராசிரியர். இவரது மனைவி எமிமால், 26. நிறைமாத கர்ப்பிணி. பிரசவத்திற்காக, சேலையூரில் உள்ள தாய் வீட்டிற்கு, சில வாரங்களுக்கு முன் சென்றார்.
கடந்த 23ம் தேதி, மருத்துவமனைக்கு சென்று விட்டு, கணவரைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை.
கணவர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததை அடுத்து, அவரது பெற்றோர் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X