district news | வேளாண் நிலையத்தில் காளான் உற்பத்தி பயிற்சி Dinamalar
வேளாண் நிலையத்தில் காளான் உற்பத்தி பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2012
01:37

நாமக்கல்: "வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, காளான் உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடக்க உள்ளது' என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 17ம் தேதி, அசோலா மற்றும் காளான் உற்பத்தி குறித்து ஒரு நாள் இலவச செயல் விளக்க பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பயிற்சியில், அசோலா ரகங்கள், உற்பத்தி முறை, வளரிடம், அசோலாவில் உள்ள சத்து, கால்நடை மற்றும் கோழித் தீவனமாக அளிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் உட்பட ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் நபர்கள், வரும் வரும் 16ம் தேதிக்குள், மோகனூர் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது 04286-266650, 266345, 266244 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X