"எச்சில் துப்புவோம்... லைட்டை உடைப்போம்' :மேம்பால ரயில் நிலையங்களில் விஷமிகள் துள்ளல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
21:20

சென்னை : மேம்பால ரயில் நிலையங்களில் மின் விளக்குகள் எரியாததாலும், வெளிஆட்களின் நடமாட்டம் உள்ளதாலும், இரவு நேரங்களில் பயணிகள் அச்சமடைகின்றனர். கடற்கரை - வேளச்சேரி இடையே மேம்பால ரயில் நிலையங்கள் சிலவற்றில் வெளி ஆட்களின் அத்து மீறல்கள் குறைந்தபாடில்லை. போலீசார் இல்லாத நேரத்தில் தண்ணீர் குழாய்களை சேதப்படுத்துவது, ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது, பயணிகள் உட்காரும் இடங்களிலும், மாடிப்படிகளிலும் எச்சிலை துப்புவது, மாடிப்படிகளில் மின் விளக்கு சுவிட்சுகளை உடைப்பது, ஒயர்களை அறுத்துவிடுவது என்று விஷமத்தனம் செய்கின்றனர். சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், கிரீன்வேஸ் சாலை, இந்திரா நகர் ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களிலிருந்து பயணிகள் கீழே இறங்கிச்செல்லும் மாடிப் படிக்கட்டுகளிலும் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால், இருட்டில் பயணிகள் பயந்த படியே கீழே இறங்கிச்செல்ல வேண்டியுள்ளது. இப்பாதையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு மேல் எட்டு சேவைகளும், வேளச்சேரியிலிருந்து, 10 சேவைகளும் இயக்கப்படுகின்றன. இந்த சேவைகளின் போது, பெண் பயணிகள் போக்குவரத்து குறைவாகவே உள்ளது. பாதுகாப்பு குறித்த பயத்தினால் தான் இந்நிலை உள்ளது. இந்த நிலையங்களில் இரவு நேரத்தில் படிக்கட்டு பகுதிகளிலும், கீழ்தளப் பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். உரிய மின் விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீ - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201210:15:40 IST Report Abuse
ஸ்ரீ I think this area is under RPF. They should take strict action against such culprits. Put them in Jail and give them very hard work like digging, planting trees, etc
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X