குவாரி மோசடி: முதல்வர் மீண்டும் ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
03:08

சென்னை:தமிழகத்தில், கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன், முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில், இதுகுறித்த அதிரடி அறிவிப்பு வரும் எனக் கூறப்படுகிறது.தமிழ்நாடு கனிம நிறுவனமான டாமினிடம் இருந்து, கிரானைட் வெட்டி எடுப்பதற்கான குத்தகை பெற்ற தனியார் நிறுவனங்கள், ஒதுக்கிய அளவை விட, அதிகளவில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது மட்டுமல்லாமல், அரசு புறம்போக்கு நிலங்களையும் காலி செய்து விட்ட விவரம், மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
இதன்மூலம், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அறிக்கை ஒன்றை தயாரித்த சகாயம், கடந்த மே மாதம், தமிழக தொழில் துறை செயலரான சுந்தரதேவனுக்கு அனுப்பினார்.அறிக்கையை ரகசியமாக வைத்திருந்த தொழில் துறை, அத்தகவல் ஊடகங்கள் மூலம் வெளியானதால், உடனடி நடவடிக்கையில் இறங்கியது. மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், தனிப்படைகளை அமைத்து ஆய்வில் இறங்கினார்.
20 பேர் கைது
கடந்த எட்டு நாட்களாக நடந்து வரும் இந்த ஆய்வில், சகாயம் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்த, மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த கீழவளவு பகுதியில் அமைந்துள்ள, பி.ஆர்.பி., சிந்து மற்றும் ஒலிம்பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முறைகேடுகளை தடுக்காமல் இருந்ததற்காக, வி.ஏ.ஓ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக, கிரானைட் நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து, மதுரை மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், கிரானைட் குவாரிகளில், தற்போது ஆய்வு நடந்து வருகின்றன.கிரானைட் குவாரி முறைகேடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன், தலைமைச் செயலகத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிரானைட் குவாரிகள் மீதான, "சீல்' வைப்பு நடவடிக்கை துவங்கியது.
மீண்டும் ஆலோசனை
இந்த நிலையில், நேற்று பகல், 2.15 மணியளவில், தலை மைச் செயலகத்திற்கு முதல்வர் வந்தார். அமைச்சர் சிவபதி, நீதிபதி வெங்கட்ராமன், திருவண்ணாமலை எஸ்.பி., உள்ளிட்டோர், முதல்வரை சந்தித்தனர். இதையடுத்து, கிரானைட் குவாரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம், ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தொழில்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, தொழில்துறை முதன்மை செயலர் சுந்தரதேவன், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதல்கட்டமாக, கிரானைட் குவாரிகள் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இழப்பு எவ்வளவு
கிரானைட் குவாரிகளை, அரசே எடுத்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள்; விதிமுறைகளை மீறி, அதிகளவில் கிரானைட் எடுத்துள்ள நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள்; இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள கிரானைட்டின் அளவு, வருவாய் இழப்பு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெசோ மாநாடு தொடர்பாகவும், பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்டம், 90 நிமிடம் நீடித்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X