பழங்குடியினர் பட்டியலில்நரிக்குறவரை சேர்க்க சிபாரிசு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2012
05:01

சென்னை:நரிக்குறவர் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மத்திய அரசிற்கு பரிந்துரைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில், மற்ற திட்டங்களுடன், மாநில அரசின், 10ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான, கல்வி உதவித் தொகை வழங்க, பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கான வருமான உச்சவரம்பு, ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. இதை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது, 2012-13ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால், அரசிற்கு ஆண்டொன்றுக்கு, 34.84 லட்சம் ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.நரிக்குறவர் என்ற குருவிக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இவர்கள், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரம், குணாதிசயங்களில் பழங்குடியினரைப் போன்றே உள்ளதை கருத்தில் கொண்டு, பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் இனத்தைச் சேர்க்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X