டீசல் விலை உயர்வு, காஸ் மானியம் குறைப்பை கண்டித்து...கடையடைப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 செப்
2012
03:13
பதிவு செய்த நாள்
செப் 21,2012 03:10

டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து, எதிர்க்கட்சியினர் நேற்று பொது வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. அதற்கு ஆதரவளித்து, திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள், தொழில், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்கள் இயங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
டீசல் விலை உயர்வு; சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு; மானிய விலையில் வழங்கும் காஸ் சிலிண்டர்களுக்கு உச்சவரம்பு கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இப்போராட்டத்துக்கு, திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதியில் முழுமையான ஆதரவு இருந்தது.திருப்பூரில் அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, குமரன் ரோடு, காமராஜர் ரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. நகை கடைகளும் மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களில், காலை மற்றும் மதியம் என இரண்டு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து வகையான வணிகமும் நடக்காததால், 20 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.தினமும் 300 டன் காய்கறி வரத்து; 60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் என "பிசி' யாக இருக்கும் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட், நேற்று வியாபாரிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமான வர்த்தகத்தில், ஐந்து சதவீதம் கூட நடக்கவில்லை என தெரிவித்தனர். அதேபோல், தெற்கு, வடக்கு உழவர் சந்தைக்கும் காய்கறி வரத்து, மக்கள் வரத்து குறைந்தே காணப்பட்டது.
லாரி உரிமையாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால், திருப்பூரிலுள்ள 2,000 லாரிகளும் இயக்கப்பட வில்லை. வெளியூர்களுக்கு சரக்கு ஏற்றும் பணியும், சரக்குகள் வரும் பணியும் பாதித்தன. பார்சல் சர்வீஸ்கள் மற்றும் லாரி ஆபீஸ்களில் சரக்குகள் தேங்கின.சரக்கு ரயில்களில் வரும் பார்சல், ரயில்வே ஸ்டேஷன் கூட்ஷெட்டில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படும். அப்பணி நேற்று நடக்கவில்லை. கலாசு தொழிலாளர்கள் பணிக்கு வராததோடு, 200 லாரிகளும் இயங்காததால், கூட் ஷெட் வெறிச்சோடி காணப்பட்டது. லாரிகள் ஸ்டிரைக் காரணமாக 40 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்ததாக, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், சரக்கு வேன், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.
பஸ்கள் ஓடின:அரசு போக்குவரத்து கழக பஸ்கள், தனியார் மற்றும் மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இருந்தாலும், பயணி கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பஸ் ஸ்டாண்டில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.ஓட்டல்கள், பேக்கரிகளும் மூடப்பட்டிருந்தன. அதனால், அக்கடைகளுக்கு அருகே கையேந்தி பவன்கள் புதிதாக முளைத்திருந்தன. ரோட்டில், தள்ளுவண்டிகளில், சைக்கிள்களில் சென்று உணவு மற்றும் டீ வகைகள் விற்கப்பட்டன.பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். முக்கிய இடங்களில் அதிகளவு போலீசார் பணியில் இருந்தனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. மருத்துவமனைகள், மருந்து கடைகள் திறந்திருந்தன. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல், போராட்டம், அமைதியாக நடந்தது.இதேபோல், அவிநாசி, சேவூர், கருவலூர், தெக்கலூர், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. பிரதான இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தது. ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டதால், தள்ளுவண்டி கடைகளில் உணவு பொட்டலங்கள் விற்கப்பட்டன.பல்லடத்தில் பஸ் ஸ்டாண்ட் கடைகள், நகராட்சி தினசரி மார்க்கெட் கடைகள், என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் மட்டும் பேக்கரிகள், மருந்து கடைகள் திறந்திருந்தன. ஓட்டல்கள் மூடப்பட்டிருந்ததால், உணவு கிடைக்காமல் விசைத்தறி தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். பல்லடத்தில் உள்ள முக்கிய வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
பாத்திரம் உற்பத்தி பாதிப்பு:திருப்பூர், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், அனுப்பர்பாளையம் புதூர், ஆத்துப் பாளையம், தண்ணீர்பந்தல், அங்கேரிபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. நாளொன்றுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து பாத்திர உற்பத்தியாளர்களும் பங்கேற்றனர். பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஏழு லட்சம் மதிப்பிலான செம்பு பாத்திரம், 23 லட்சம் மதிப்பிலான எவர்சில்வர் பாத் திரம், 20 லட்சம் மதிப்பிலான பித்தளை பாத்திரம் என 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ரயில் மறியல் செய்ய முயற்சி
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், இந்திய கம்யூ., - மா.கம்யூ., கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 500 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நுழைவாயிலில் நின்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.பின், ரயில்வே ஸ்டேஷன் பிர தான நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தனர். தண்டவாளத்தில் படுத்தும், அமர்ந்தும் கோஷம் எழுப்பினர். 10 நிமிடங்கள் இப்போராட்டம் நடந்தது. அச்சமயத்தில், ரயில் எதுவும் வரவில்லை. டி.எஸ்.பி., ராஜாராம் தலைமையிலான போலீசார், அவர்களை கைது செய்து, பஸ்களில் ஏற்றி, திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். 52 பெண்கள் உட்பட 432 பேர் கைது செய்யப்பட்டனர்.உணவு கேட்டு மறியல்கைது செய்யப்பட்டோர் மற்றும் போலீசாருக்கு தக்காளி சாதம் கொண்டு வரப்பட்டது. கைதானவர்களில் 350 பேருக்கு மட்டுமே உணவு கிடைத்தது. மீதமுள்ளோருக்கு உணவு கிடைக்கவில்லை. அவர்கள், மண்டபத்தில் இருந்து வெளியேறி காலேஜ் ரோட்டில் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின், அவர்களாகவே, போராட்டத்தை கைவிட்டு மீண்டும் மண்டபத்துக்குள் சென்றனர்.போலீசார் கூறுகையில், "பந்த் போராட்டத்தால், கடைகள் எதுவும் இல்லை. பெரும் சிரமத்துக்கு இடையே 350 பேருக்கு தக்காளி சாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. கைதானவர்களுக்கு உணவு போதவில்லை என்பதால், போலீசாருக்கு ஒதுக்கிய பொட்டலங்களையும் அளித்து விட்டோம். பிஸ்கெட் பாக்கெட்களும் வழங்கினோம். காலையில் இருந்து பணியாற்றிய போலீசார் 50 பேரும், மதிய உணவு இல்லாமல் இருக்கிறோம்,' என்றனர்.ஊத்துக்குளி: ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷனில் மறியலில் ஈடுபட சென்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு, மத்திய அரசுக்கு எதிராகவும், அறிவிப்புகளை வாபஸ் பெறக்கோரியும் கோஷம் எழுப்பினர். காங்கயம் டி.எஸ்.பி., துரை பாஸ்கரன் தலைமையிலான போலீசார், அவர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 30 பெண்கள் உட்பட 122 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 பேரை கைது செய்தனர். அவிநாசியில் கம்யூ., கட்சியினர் ஊர்வலமாக மெயின் ரோடு வரை சென்றனர். அங்கு அவர்களை டி.எஸ்.பி., அரங்கசாமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை தாண்டிச் சென்ற தொண்டர்கள், கோவை மெயின் ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டவாறே சாலை மறியல் செய்தனர். 42 பெண்கள் உட்பட 192 பேரை கைது செய்தனர்.- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X