தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 அக்
2012
07:29
பதிவு செய்த நாள்
அக் 06,2012 07:27

சென்னை : தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஜூலை மாதம் முதல், முன்தேதியிட்டு இந்த பணம் வழங்கப்படும்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தாண்டு, ஜூலை மாதம் முதல், மத்திய அரசு அலுவலர்களுக்கான, அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அதே ஜூலை மாதம் முதல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், உயர்த்தி வழங்கப்படுகிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும்.
இந்த உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும்.
இதன் மூலம், அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navasathish - MADURAI,இந்தியா
06-அக்-201211:50:49 IST Report Abuse
navasathish கரண்ட் கட் 14 மணி நேரம் அரசு அலுவலங்களில் சென்றால் கரண்ட் இல்லை என்று கட்டணம் கூட செலுத்த முடிவதில்லை , அரசு ஊழியர்களை விட நாட்டின் தொழில் சாலைகள் , தொழில் உற்பத்தி முக்கியம் இந்த 7 சதவீதம் தொழில் அபிவிருத்திக்கு பயன்படாது , இப்படி பணத்தை இறைத்து இந்த இக்கட்டான சுழலில் அரசு ஊழியர்களிடம் மட்டும் பணம் புழங்கவேண்டும் என நினைப்பதும் , மத்திய அரசு சட்டம் போட்டதும் இணையாய் நானும் அகவிலை படி உயர்த்துவேன் என்ற வீராப்பு இப்ப தேவையா? முடங்கிபோனவை கைகொடுக்காமல் கொஞ்சம் ஆரோக்கியமாய் இருப்பவனுக்கு பூஸ்ட் பாட்டில் கொடுப்பது கண்டிப்பாய் சாமானியர்களுக்கு அரசின் மேல் கோபம் தான் வரும் . அதுக்கு மேல் இளைஞர்கள் tnpsc தான் எழுத வருவான் உங்க ஊர்லே தொழில் தொடங்க சேட்டு தான் வருவாரு ..அவருக்கு தான் தடை இல்லா மின்சாரம் தருவீங்க , உள்ளூர் தொழில் அதிபர்கள் பாடு பரிதாபம் தான் , அரசு இதை பற்றி சிந்திபதில்லை -மதுரை என்.நவசதீஷ் குமார் .
Rate this:
Cancel
taj - chennai,இந்தியா
06-அக்-201210:43:26 IST Report Abuse
taj தமிழக முதல்வர் நல்ல அறிவிப்புகள் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் மின்சாரம் மட்டும் கொடுக்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X