மின் தேவை திடீரென அதிகரிப்பதால் கூடுதல் மின்வெட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2012
00:57

சென்னை:"மின் தேவை திடீரென அதிகரிக்கும் பட்சத்தில், கூடுதல் மின் வெட்டு தவிர்க்க முடியாது;
அதனால், முன்கூட்டியே அறிவிக்க இயலவில்லை' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) பதிலளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, "சிட்டிசன் கார்டியன்' அமைப்பின்
நிர்வாகி, ரவிச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்'
விசாரித்தது.
மாவட்டங்களில் மின் வெட்டு நேரம் எவ்வளவு, மின் வெட்டு குறித்த தகவலை, முன்கூட்டியே, மீடியாக்கள் மூலம், ஏன் தெரிவிக்கவில்லை என, விளக்கம் அளிக்க பெஞ்ச் உத்தரவிட்டது.
இவ்வழக்கில், டான்ஜெட்கோ இயக்குனர், ஜெயசீலன், தாக்கல் செய்த பதில் மனு:
தமிழகத்தின் மின் தேவை, 11 ஆயிரம் முதல், 12 ஆயிரத்து 500 மெகாவாட். மின் திட்டங்கள், மின்சாரம் வாங்குவதன் மூலம், கிடைக்கும் மின்சாரம், 7,000 முதல், 8,000 மெகாவாட்.
மின் தேவையையும், வினியோகத்தையும் இணைக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள், 2008ம் ஆண்டு, நவ., முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழிற்சாலைகள், விவசாயம், வர்த்தகம், குடியிருப்புகள், இந்த மின் வெட்டைத் தாங்கிக் கொள்ள வேண்டும். உயர் அழுத்த மின்சார தேவையில், 40 சதவீத வெட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சுழற்சி அடிப்படையில், மூன்று மணி நேரம், மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில், இரண்டு மணி நேரம், மின் வெட்டு உள்ளது.
மின்சார இருப்பு, தேவையைப் பொறுத்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளில், கூடுதல் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
மின் இருப்பைப் பொறுத்து,
விவசாயத்துக்கு, பகலில் ஆறு மணி நேரமும், இரவில், மூன்று மணி நேரமும், மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.
நீர் மின் நிலையங்களில் இருந்து, 2,224 மெகாவாட் மின்சாரம், உற்பத்தி செய்யலாம். பருவ மழை பொய்த்ததால், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, நீர் மின்சார உற்பத்தி, 48 சதவீதமாக குறைந்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின், இரு யூனிட்டுகளும் (1,000 மெகாவாட்), 2007, 2008ம் ஆண்டுகளில் செயல்பட துவங்கியிருக்க வேண்டும். நெய்வேலி அனல் மின் நிலைய விரிவாக்க திட்டங்களும், 2009ம் ஆண்டில், செயல்பட
துவங்கியிருக்க வேண்டும்.
இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 1,250 மெகாவாட் மின்சாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், மேட்டூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையத்தை, விரைந்து இயக்குவதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.
மின் தேவை, வினியோகத்தை, நிர்வகிப்பதன் மூலம், வோல்டேஜ், அதிர்வெண் பராமரிக்கும் பொறுப்பு, மாநில வினியோக மையத்துக்கு உள்ளது.
மத்திய மின் உற்பத்தி மையங்களிலும், மாநில மையங்களிலும், கட்டாய செயல் இழப்பு ஏற்படும் போது, மின் கட்டமைப்பை பாதுகாக்க, கூடுதல் மின் வெட்டு அமல்படுத்த வேண்டியதுள்ளது.
மின் தேவை, வினியோகம் சீராக இருக்க வேண்டும். இல்லையென்றால், மின் கட்டமைப்பில் குளறுபடி ஏற்படும். எனவே, மின் வெட்டு தவிர்க்க முடியாதது.
தற்போதைய மின் உற்பத்தியானது, மின் தேவைக்கு இணையாக இல்லை. இதனால், மாவட்ட வாரியாக, மின் வெட்டு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை தவிர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள வினியோக பாதை, 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களுக்கு, நான்கு, நகர்ப்புறங்களுக்கு, ஆறு என, பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பாகுபாடு இல்லை.
சென்னையில், சட்டசபை, தலைமைச் செயலகம், ஐகோர்ட், மாநில அரசின் தலைமை அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மருத்துவமனைகள், போலீஸ் தலைமை அலுவலகங்கள் உள்ளன. எனவே, முடிந்த வரை, சென்னையில் தடையின்றி மின்சாரம்
வழங்கப்பட வேண்டும்.
சுற்றுலா, வர்த்தக மையமாக இருப்பதால், சர்வதேச சுற்றுலாப் பயணிகளும், தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இருந்து, சென்னைக்கு வருகின்றனர். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு மணி நேரம், மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில், பெங்களூருவில், மின் வெட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் திட்டங்கள் மூலம், வரும் மாதங்களில் மின்சார நிலைமை மேம்படும்.
கட்டாய செயல் இழப்பு, திடீர் மின் தேவை போன்ற காரணங்களால், மின்வெட்டு குறித்து, முன்கூட்டியே அறிவிப்பு செய்ய முடியவில்லை. மற்றபடி, மின் தடை பற்றி, மீடியாக்கள் மூலம் அறிவிக்கப் படுகிறது.
படிப்படியாக, மின் வெட்டுப் பிரச்னையை குறைக்க, நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manian - erode,இந்தியா
04-டிச-201207:33:32 IST Report Abuse
manian சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் பத்து முதல் பதினான்கு மணி வரை மின்தடை செய்கிறார்கள் ஆனால் ஹை கோர்டில் மூன்று மணி நேரம் தடை செய்வதாக பொய் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X