district news | வெளிச்சம் தராத "ஹைமாஸ்' விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் Dinamalar
வெளிச்சம் தராத "ஹைமாஸ்' விளக்கு இருளில் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 பிப்
2013
02:41

தேவிபட்டினம்:ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் "ஹைமாஸ்' விளக்கு எரிதாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ÷

தவிபட்டினத்தில் நவபாஷான கடற்கரை கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிலர் நாகதோஷம்,

புத்திர தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நிவர்த்தியாவதற்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர். இதனால், இந்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்

வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் "ஹைமாஸ்' (உயர் கோபுர விளக்கு) விளக்கு அமைக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சத்தில்

பஸ் ஸ்டாண்ட் ஜொலித்தது. நாளடைவில் இந்த விளக்கு வெளிச்சம் தரமறுத்ததால் பஸ் ஸ்டாண்ட் இருளில் மூழ்கி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியூர் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன்

நிற்கவேண்டிய பரிதாப நிலை நீடித்துள்ளது.இது குறித்து தேவிபட்டினம் ஊராட்சி தலைவர் ஜாகிர் உசேன்'கூறியதாவது: "ஹைமாஸ்' விளக்கு பழுது ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு பராமரிப்பு என்று எந்த

நிதியும் இல்லை. ஊராட்சி நிதி பற்றாக்குறையாக இப்பதால், இதை சரி செய்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விளக்கு பக்தர்களின் வசிக்காக விரைவில் சரிசெய்யப்டும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X