புதுச்சேரி:ஆட்டோ தொழிலா ளர்களுக்கும் பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும் என, அண்ணா தொழிற் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெய லலிதா பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவை ஆலோசனைக் கூட்டம், செயலாளர் பாப்புசாமி தலைமையில் நடந்தது. மாநில அ.தி. மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ரவீந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் சின்னதுரை, அரிகிருஷ்ணன், பரசுராமன், நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தொழிற்சங்க கிளைகள் செயல்படும் அனைத்து இடங்களிலும் கொடியேற்றி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குவது. புதுச்சேரியில் இரட்டை டீசல் விலையைக் கைவிட மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவது போல ஆட்டோ தொழிலாளர் களுக்கும் பெட்ரோல் மானியம் வழங்க வேண்டும். நலிவடைந்து வரும் கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.