சித்திரையின் சிறப்புகள் பாவங்கள் விலக சித்திர குப்தனை வணங்குவோம் நாளை சித்திரை 1ம் தேதி சித்திரத்தில் உருவான சித்திர (குப்தன்) புத்திரர்! வணங்குவோம் வாருங்கள்.. | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
சித்திரையின் சிறப்புகள் பாவங்கள் விலக சித்திர குப்தனை வணங்குவோம் நாளை சித்திரை 1ம் தேதி சித்திரத்தில் உருவான சித்திர (குப்தன்) புத்திரர்! வணங்குவோம் வாருங்கள்..
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஏப்
2013
00:51

மாதங்களில் முதல் மாதம் விஷூ கனி காணுதல் என்ற பெயர் கொண்ட மாதம் ரிஷிகள் முனிவர்கள் விரதமிருந்த மாதம் சிவ பெருமான் போற்றி பாராட்டி (சாவித்திரி) விரதத்தை கொண்ட மாதம், சிவ பெருமானே சித்திர (குப்தன்) புத்திரர் ஓவியம் வரைந்து உருவாக்கிய மாதம், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா திருநங்கைகளால் கொண்டாடப்படும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கொண்டாடும் மாதம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மாதம் மா, பலா, வாழை என முக்கனிகளும் பூத்து குலுங்கும் இளவேனில் கொண்ட மாதம் தான் சித்திரை...

கயிலையில் சிவ பெருமானும், பார்வதியும் அருகருகே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவனை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது என்றார்.
ஆம்! சுவாமி என்றார் பார்வதி
உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சியளித்து இந்திரனே! கவலைப்படாதே! உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ'' என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை இமை பசுங்கன்றாக மாற்றி உடன் அனுப்பி வைத்தார்.

தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன்.
அவற்கை உடனே அம்பிகை கொண்டு வந்தார் சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தாரிகைகளால் தன்னைப் போலவே ஒரு உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்பிக்க கருணை ததும்பும் கண்களால் பார்த்தான் பிறகு சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக்குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள் என்றார்.


சிவபெருமான் தன் கைகளை நீட்டி ""மகனே வா'' என உள்ளம் நிறைந்த அன்போடு கூப்பிட்டார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது.

உலகத்திற்கே தாயும், தந்தையுமான பார்வதி பரமேஸ்வரனை வணங்கியது.
அக் குழந்தையின் தலையில் தன்கைகளை வைத்து ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்தரகுப்தன் என எழைக்கிறேன். குழந்தாய் நீ நீடுழி வாழ்வாய் எல்லா ஜீவராசிகளும் அவரவர் செய்யும் எல்லா செயல்களையும் நீ ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா''. அவ்வப்போது எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.


பிறகு சித்திர குப்தரை அழைத்தார் சித்தர புத்திரா! இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு பசு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும் அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் அதனால் இந்திரனின் குழந்தை இல்லா குறையும் தீரும்'' என்றார்.

அதேபோல இந்திராணி பராமரிப்பில் இருந்த பசு மேய்ச்சல் துறைக்குப் போய் நன்றாக மேய்ந்து பிறகு தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்தரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது.

சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏரும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் மகனாய் அவதரித்தார் சித்திரகுப்தன் என்ற பெயர் பெற்றார்.

சிறு பாலகனாக வளர்ந்த அவன் இந்திரன் - இந்திராணியை வணங்கினான் நான் கைலாயம் போகிறேன் அங்கும் இங்கும் இருப்பேன் நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று வேண்டினான்.

சித்திரகுப்தனின் வார்த்தைகளைக் கேட்டதும் இந்திரத் தம்பதிகளின் கண்கள் கலங்கின. ஆனாலும் உண்மை நிலை அறிந்ததால் சித்திரகுப்தனுக்கு வாழ்த்து சொல்லி விடை கொடுத்தனர்.

சித்திரகுப்தன் கயிலையை அடைந்த பிறகு அவளை (சித்திரகுப்தனை) எமனது சபையில் இருந்தபடி பாவ புண்ணிய கணக்கு எழுத சொல்லி அனுப்பி வைத்ததாகவும் அது முதல் இந்நாள் வரை அவரவர் செய்யும் பாவ புண்ணிய கணக்கு எழுதிவருவதாலும் கூறப்படுகிறது. பாவங்களை அகற்றி புண்ணியங்கள் சேர்ப்போம்!

சித்திரகுப்தனை உருவாக்கும் பணியில் சிவபெருமான் உயிரூட்ட காத்திருக்கிறார் பார்வதி...
தமிழ் புத்தாண்டு அன்று காலையில்
எதன் முகத்தில் விழிக்க வேண்டும்!


* அதிகாலை எழுந்தவுடன் பூமித்தாயை இருகைகளாலும் தொட்டு வணங்குங்கள்

* இரு உள்ளங்கைகளிலும் லட்சுமி குடியிருப்பதால் உள்ளங்கைகளையும் பார்க்க வேண்டும்.

* பின் இறைவனது திருவுருவப்படங்கள் தமது முன்னோர்கள் உருவப்படும் பூஜை அறையில் வைக்கப்பட்டுள் வலம்புரி சங்கு, காசுகள் பரப்பிய தாம்பூலத்தட்டு, பலவகை கனிகள் பரப்பிய தாம்பூலத்தட்டு கோமாதா முகம்பார்க்கும் கண்ணாடி ஆகியவற்றின் மீது விழிக்கலாம்.
கல்வி, செல்வம், விவேகம், வீரம், வெற்றி என அதி தேவதைகள் வீற்றிருக்கும் ""உள்ளங்கைகளை '' தரிசித்தால் அன்றைய நாள் முழுவதும் நல்ல நாளே....

காக்கைக்கு அன்னமிடுங்கள், கோமாதா, யானைக்கு கனிகள் கொடுத்து வாழ்வை வளம்பெறச் செய்யுங்கள்.

சித்திரகுப்தன் கட்டுரை தொடர்ச்சி

விரதம் இருப்பது எப்படி?


சித்திரை மாதம் பவுர்ணமி அன்று உப்பில்லாமல் விரதமிருந்து சித்திரகுப்த பூஜை செய்ய வேண்டும்.
* ஒரு தட்டில் (தாம்பூலத்தில்) நவதானியங்கள், கனிவகைகள், நோட்டு, புத்தம், பேனா, உப்பு, கற்பூரம், ஊதுபத்தி, கிண்ணங்களில் நெய், பால், தயிர், பொங்கல், காய்கனிகள் கூட்டு பொரியல், பச்சடி, மோர் குழும்பு, வடை, பாயாசம் மற்றும் பலவகை பொருட்களை வைத்து நைவேத்தியம் நிவேதனம் செய்த பின் தானம் வழங்க வேண்டும்.
* விதரமிருப்பவர்கள் பகலில் பால், நெய், தயிர் ஆகியற்றை சேர்க்க கூடாது
* பூஜைக்கப் பிறகு சித்திரகுப்தன் அமராவதி, கதையை படிக்க வேண்டும் பிறரிடம் 11 முறை கதையை கூற வேண்டும்.
* சித்திர குப்தன் கதையை படித்தவர்களும், கேட்டவர்களும், சித்திரகுப்தன் அருளால் பாவங்கள் விலகி எல்லா நலனும் பெற்று சகல சவுபாக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்!


 

Advertisement
மேலும் திருநெல்வேலி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X