"வறட்சியை தாங்கும் தென்னை ரகங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு வைப்பு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2013
06:28

உடுமலை:""வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகள் தேவைக்காக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,'' என ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசினார். உடுமலை அருகே பெரியகோட்டை கிராமத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில் உழவர் பெருவிழா நடந்தது. ஊராட்சி துணை தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சீனிவாசன் பேசியதாவது: ஆழியாறு ஆராய்ச்சி நிலையத்தில், தென்னை விவசாயிகள் நலனுக்காக பல புதிய ரக தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, வறட்சியை தாங்கி வளரும் டிப்தூர் நெட்டை மற்றும் அரசம்பட்டி நெட்டை ஆகிய இரண்டு ரகங்கள் மையத்தில் விவசாயிகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தென்னையில், 5 முதல் 6 வயது வரை காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்படும். இவ்வண்டு, குருத்தை ஆங்கில, எழுத்து "வி' வடிவில்,
கத்தரிப்பதே நோய் தாக்குதலின் அடையாளமாகும். இளங்குருத்தில், 2 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு நாப்தலீன் உருண்டைகளை இட வேண்டும். மேலும், "போரேட்' என்ற குருணை மருந்தினை ஒரு மரத்திற்கு 10 கிராம் என்ற அளவில் பொட்டலத்தில் இட்டு, அதை துளையிட்டு, குருத்தில் செருகி வைக்க வேண்டும்.
கருந்தலைப்புழுவை கட்டுப்படுத்த தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், ஒட்டுண்ணி கிடைக்கிறது. ரசாயன முறைக்கு மாற்று முறையாக உயிரியல் முறையில், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையாக உள்ளது. மேலும், அடித்தண்டு அழுகல், குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும், சூடோமோனஸ் மற்றும் டிரைகோடெர்மா பூஞ்சாண கொல்லிகள் ஆராய்ச்சி நிலையத்தில் கிடைக்கிறது. சிவப்பு கூன் வண்டு மற்றும் காண்டாமிருக வண்டுகளை 'கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து, இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் இவ்வாறு பேசினார்.
பாசன சபை தலைவர் செல்வராஜ், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை வேளாண் அலுவலர் திருமகள்ஜோதி உட்பட பலர் பேசினர். உதவி வேளாண் அலுவலர் அமல்ராஜ் நன்றி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X