| குப்பை கிடங்காக மாறிய அச்சிறுப்பாக்கம் குளம் பராமரிக்குமா பேரூராட்சி நிர்வாகம்? Dinamalar
குப்பை கிடங்காக மாறிய அச்சிறுப்பாக்கம் குளம் பராமரிக்குமா பேரூராட்சி நிர்வாகம்?
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
21:34

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் குளத்தில், குப்பை மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு வருவதால், நீர் மாசடைந்து, தூர்ந்து வருகிறது.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு, 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட, பெரிய கோவில் குளம் உள்ளது. நீண்ட ஆண்டுகளாக குடிநீர் குளமாக பயன்பட்டு வந்த இக்குளம், தற்போது பராமரிப்பின்றி, குப்பை மற்றும் கழிவுநீர் கலந்து, மாசடைந்து காணப்படுகிறது.
குளத்தின் அருகில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, பிளாஸ்டிக் போன்ற கழிவுகள், தொடர்ந்து, குளத்தில் கொட்டப்பட்டு வருவதால், நீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், குளம் முற்றிலும் சீரழிந்து, தூர்ந்து போகும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், "பழமையான இக்குளம், எங்களது அனைத்து தேவைகளுக்கும் பயன்பட்டு வந்தது. இதனை, பேரூராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காததால், மாசடைந்து காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால், குளம் முற்றிலும் சீரழியும் நிலை ஏற்படும். எனவே, குளத்தில், குப்பை கொட்டப்படுவதை தடுத்து, தூர்வாரி, பராமரிக்க வேண்டும், என்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X