அகற்றப்படாத சார கம்புகளால் ரயில் பயணிகள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
22:29

அச்சிறுப்பாக்கம்: மேல்மருவத்தூர் ரயில் நிலைய நுழைவுப் பகுதியில், தொங்கிக் கொண்டிருக்கும் சாரக் கம்புகளால், ரயில் பயணிகள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுராந்தகம் - திண்டிவனம் ரயில் தடத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ரயில் நிலையம், முக்கிய பகுதியாக விளங்குகிறது. சுற்றுப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சென்னை, திண்டிவனம் உள்ளிட்ட இடங்களுக்கு பணிக்கு செல்வோர், பல்வேறு பகுதிகளில் இருந்து, இங்குள்ள ஆதிபராசக்தி கோவில் மற்றும் தனியார் கல்லூரி ஆகியவற்றுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ரயில்நிலைய நுழைவுப் பகுதி விரிவாக்கம் மற்றும் இருவழிப் பாதையாக மாற்றும் பணி துவங்கப்பட்டது. ஆனால், இதுவரை முடிக்கப்படவில்லை. இதற்காக, அங்கு நடப்பட்ட சாரத்தில் பொருத்தப்பட்டுள்ள கம்புகள், பயணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே, பயணிகளின் நலன் கருதி, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறுகையில், "ரயில் நிலைய முகப்பில், கட்டுமானப் பணிகளுக்காக, ஆறு மாதங்களுக்கு முன், சாரம் கட்ட காம்புகள் நடப்பட்டன. ஆனால், இதுவரை பணி முடிக்கப்படவில்லை. இவை, தினமும் வந்து செல்லும் பயணிகள் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இடையூறாக உள்ளதால், பணிகளை விரைந்து முடித்து, சார கம்புகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X