துவரை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு அறிவுரை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2013
00:17

விழுப்புரம்:துவரை சாகுபடி முறையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுமென வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் விடுத்துள்ள அறிக்கை:
பயறு வகை பயிர்களில் அதிக புரதச்சத்து நிறைந்தது துவரை. இப்பயிர் சாகுபடி நேரடி விதைப்பு செய்யும் முறை பல பகுதிகளில் உள்ளது. கோலியனூர் வட்டாரத்தில் கடந்தாண்டு பாலித்தீன் பைகளில் நாற்று விட்டு நடவு செய்யும் முறை துவங்கியது.
இந்த நடவு முறையில் ஏக்கருக்கு சுமார் 500 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
நேரடி விதைப்பு மூலம் ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ மட்டுமே மகசூல் எடுக்க முடியும். பாலித்தீன் பை நாற்று வளர்த்து நடவு செய்யும் போது, ஏக்கருக்கு சுமார் 1250 கிலோ மகசூல் எளிதாக எடுக்க முடிகிறது.
அரசு வேளாண்மை துறையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் துவரை நாற்றுவிட்டு நடவு முறை சாகுபடி செய்ய ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் இடுபொருள் மானியம் வழங்கப்படுகிறது. துவரை பயிருக்கு சொட்டு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு நூறு சதவீதம், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி பானாம்பட்டு, குருமன்கோட்டை, மேல்பாதி, தொடர்ந்தனூர், நரையூர், காகுப்பம், தென்னமாதேவி, செங்காடு, சோழகனூர், சோழாம்பூண்டி ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் செயல்விளக்க தளைகள் அமைக்க விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் துவரை நாற்றுவிட்டு நடவு செய்து அதிக மகசூல் பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X