எழுத்தே எங்கள் சுவாசம்: தேனி மாவட்ட எழுத்தாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
02:04

கதை, கவிதை, கட்டுரை, தொடர்கள் எழுதுவது என்பது அரிது. ஒவ்வொரு ஊரிலும், இதில் ஆர்வம் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பள்ளி பருவத்தில் கவிதையாக அரும்பும் இந்த திறனை, உணர்ந்து தொடர்ந்து மெருகேற்றி வாழ்க்கை பயணத்தோடு இணைத்து கொண்டு செல்பவர்களும் அரிது.
அதே நேரத்தில், இதற்கு அடிமையாகி தன் வாழும் காலத்தை, பார்க்கும் மனிதர்களை, பழகும் விதத்தை, மரபுகளை கவிதை, சிறுகதை என படைத்து, உணர்வுகளை பிரதிபலிக்கும் சம காலத்தின் கண்ணாடிகளாகவும் எழுத்தாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். நல்ல விஷயங்களை வருங்கால சமுதாயத்திற்கு வழங்குகிறார்கள்.
இதில் ஒரு சிலரை தவிர, பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் இல்லா விட்டாலும், ஆத்ம திருப்திக்காக தங்களை அர்ப்பணித்துள்ளார்கள். புத்தகம் வெளியிடுவது என்பது, "" ஒரு தாய் கர்ப்பம் தரித்துப் பின் பிரசவிப்பது போன்ற ஒரு அரிய செயல்'' என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.தேனி மாவட்டத்தில் எழுத்தை சுவாசமாக கொண்டு வாழ்ந்து வரும் பலரில், ஒரு சிலரை உங்களுக்காக "லைட் ரீடிங்' பகுதியில் அறிமுகப்படுத்துகிறோம்.
ஆன்மிகம்
ஆழ்வார்க்கடியவன் வெ.இராஜகோபாலன், ஆன்மிக எழுத்தாளர், தேனி: பெரியகுளத்தில் படிப்பை முடித்துவிட்டு தலைமையாசிரியர்,பின் மேற் பார்வையாளர், கல்வி அலுலர் என பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் துவக்க காலத்தில் புதுக்கவிதை எழுதியுள்ளார். நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதோடு சரி.
அதன்பின் வேலை, குடும்பம் என வாழ்க்கை ஓடிவிட்டது. ஓய்வுபெற்ற பின், குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றிவிட்டு, துறவறம் மேற்கொண்டு முழு நேர ஆன்மிக புத்தகங்கள் எழுதி அச்சிட்டு வருகிறார்.இவருடைய முதல் படைப்பு "திருமால் அமுது' என்ற பெயரில், பெருமாள் குறித்து 208 பக்கங்களில், 695 பாடல்கள் எழுதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். அடுத்த பாகமும் தயாராகியுள்ளது.
இது போக விருப்பமுடன் அழைத்தால், ஓய்வு நேரங்களில் ஆன்மிக சொற்பொழிவுக்கும் செல்கிறார். இதற்கு கட்டணம் எதிர்பார்ப்பதில்லை. மேலும் இவர், "ரதபந்தம்' என்ற சித்திரை கவிதையும் எழுதியுள்ளார். இவருக்கு துணையாக இவரது மனைவி இந்திராணி உள்ளார். மகன் கனடாவிலும், மகள் யு.எஸ்.சிலும் வசிக்கின்றனர். மேலும் இவர், தென்காளகத்தித் தல வரலாறு(உத்தமபாளையம்), சம்புநாதர் அகிலாண்டேசுவரி, கன்யகா பரமேஸ்வரி, அல்லிநகரம், சிவதேனமுது, அபிராமி அந்தாதி ஆகிய புத்தகங்கள் எழுதியுள்ளார்.
தொடர்ந்து ஆன்மிக புத்தகங்கள் எழுதி, வருங்கால தலைமுறை ஒழுக்க நெறிகளுடன் வாழவேண்டும், என்பதற்காக பணியை தொடர்கிறார். அன்பரை வாழ்த்த: 9940138308.
நகைச்சுவை
தன்னம்பிக்கை
தேனி.எஸ்.மாரியப்பன், நகைச்சுவை, தன்னம்பிக்கை எழுத்தாளர்:
தேனி மாவட்டம் தாமரைக்குளம் சொந்த ஊர். பள்ளி படிப்பு மற்றும் தொழிற் கல்வி முடித்துவிட்டு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அலுவலராக பணியில் சேர்ந்து ஓய்வுபெற்றுள்ளார். தனது 30 வயதில் இருந்தே, எழுத்து பணியை துவக்கியுள்ளார். நகைச்சுவை உணர்வு உள்ள இவர், முதலில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்தார். தினமலர், வாரமலரில், தமாசு பகுதியில் இவரது தமாசுகள் பரிசு பெற்றுள்ளன.
பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவ்வாறு எழுத்து பணியை துவக்கியவர், தற்போது வெற்றியின் ரகசிய தத்துவம், வெற்றியே லட்சியம் போன்ற தன்னம்பிக்கை புத்தகங்கள், நீங்க நல்லா சிரிக்கணும், சிரிப்போம் கவலையை மறப்போம், அறிஞர்களின் சாதுர்ய பேச்சுகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 72 வயதிலும் தற்போது மேலும் பல புத்தகங்கள் எழுதி வருகிறார். "மனிதன் வந்தான், வாழ்ந்தான் என்றில்லாமல் ஒவ்வொரு புத்தகமும் ஒரு கல்வெட்டு' என்று வருங்கால தலை முறையினரும் பயன்பெறும் வகையில்,எழுதிவருகிறார். ஹலோ சொல்ல-9486020940.
கவிதை
ஆண்டிபட்டி ஞானபாரதி: ஆண்டிபட்டியில் பள்ளியில் படிக்கும் போதே பாரதியின் மீது ஈர்ப்பு கொண்டதால் ஞானபிரகாஷ், ஞான பாரதியானார்.அதன்பின் தொலைநிலைக்கல்வியில் காந்திய சிந்தனை பாடத்தில், எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். வேலப்பர் கோயில் மலையடிவாரத்தில் விவசாயத்தை பார்த்துக் கொண்டே, இலக்கியத்தில் முழு ஈடுபாட்டுடன் தனது பயணத்தை நடத்திவருகிறார். 13 வயதில் இருந்தே எழுத்து பணியை துவக்கியவர், மாதவம் செய்து, சீர், இளங்குயில்கள், கம்பீரம், விழிகள் உள்ளிட்ட 15 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
பல கட்டுரைகள் எழுதியுள்ளார். 43 வயதான இவர், தொடர்ந்து தன்னம்பிக்கை, பட்டிமன்ற பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் தொடர்ந்து இலக்கியத்திற்காக தன்னை அர்பணித்துள்ளார்.
பல விருதுகள் பெற்றுள்ளார். காந்திய சிந்தனையுடன் வாழும் இவர் தனக்கென்று மொபைல் வைத்துக்கொள்வதில்லை.இவரிடம் இலக்கியம் பேச: 04546-242636.

வரலாறு
எஸ். வர்கீஸ் ஜெயராஜ்: உத்தமபாளையம்: எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., படித்து விட்டு, வரலாற்று துறையில் துணைப் பேராசிரியராக, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர், வரலாற்று பதிவுகளை புத்தகமாக எழுதி வருகிறார்.
1997 ம் ஆண்டு "அறிவியல் தொழில்நுட்பமும் வரலாறும்' என்ற ஆங்கில புத்தகமும், 2009 ல் "மதுரையில் ஜமின்தாரி முறை' என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்.
கடைசியாக, ""முல்லைப் பெரியாறு -வைகை அணைக் கட்டுகளின் பசுமை வரலாறு'' என்ற வரலாற்று புத்தகத்தை எழுதியுள்ளார். தென் மாவட்டங்களில் முதன்மை ஆறு வைகை நதியாகும். அதே போல் தென் மாவட்ட மக்களின் உயிர் நாடியாக பெரியாறு விளங்குகிறது. 1895 ல் கட்டிமுடிக்கப்பட்ட பெரியாறு அணையின் நீரை மேலும் சமன்படுத்தி விவசாயத்தை விரிவுபடுத்தும் திட்டமாக 1959 ல் கட்டி முடிக்கப்பட்டது வைகை அணைத்திட்டம்.
இந்த இரு திட்டங்களை பற்றிய அனைத்து விபரங்களும், வரலாற்று பின் புலத்துடன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இரு திட்டங்களின் நீர்ப்பாசன வரலாறு, பெரியாறு மின்திட்டம், வைகை நீர்த்தேக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுதல், நீர் வினியோகம், நவீனப்படுத்துதல்,
பென்னிகுவிக் ராணுவப் பதவிகளும், பொறியாளர்களும், கவர்னர்களும் உள்ளிட்ட தகவல்களை வரலாற்று பதிவுகளாக்கியுள்ளார்.தொடர்ந்து வரலாற்று பதிவுகளை புத்தகமாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். தொடர்புக்கு-9791562515.
நாடகம்
என்.முத்துவிஜயன்: போடி: ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியில் உள்ளார். "வாழ்வில் ஒரு திருநாள்' என்ற தலைப்பில் நாடகமாக எழுதிய கட்டுரைகள். அதன் பின் மதுரை வானொலியில் ஆபுத்திரன், காதல் புதிது, வானவில் நாடகமாக எழுதிய கட்டுரைகள் ஒலிபரப்பு செய்யப்பட்டது. 1989ல் இருந்து நாடக நடிகர், சரித்திரம், குடும்பம், துப்பறியும் நாடகம் பற்றி ஆண்டுக்கு 4 முறை வருகிறேன்.
கம்பன் கழக கட்டுரைகள், வாழ்வில் ஒரு திருநாள், பால உதயம் ஆகிய புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
இதோடு "சினிமா நூறு என்ற புத்தகத்தை' ஒரு ஆண்டாக எழுதி வருகிறேன்.முடியும் தருவாயில் உள்ளதால், விரைவில் புத்தகம் வெளியிட உள்ளேன்,என்றார். சிறுவர் இலக்கியங்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். பெண்ணியம் என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கும், சுற்றுச்சூழல் சட்டங்கள் பற்றியும், திருக்குறள் ஒரு பார்வை என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார். எனது தயார் ஆசியுடனும், பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடனும் எழுத்து பணியை தொடர்வேன், என்கிறார்...9944029677.
சிறுகதை
கள்ளிபட்டி குப்புசாமி: இவர் இடைநிலை ஆசிரியராக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். 65 வயதான இவர் தொடர்ந்து கவிதை, சிறுகதை, கட்டுரை, தன்னம்பிக்கை, அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, உள்ளிட்ட தலைப்புகளில் 140 புத்தகங்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். தொடரும் பயணத்தை தொடரும்,இவருக்கு ஹலோ சொல்ல..94438 04376.
ஹைக்கூ
ஆர்.கம்பம் ரவி: இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு, ஸ்டூடியோ
நடத்தி வருகிறார். 43 வயதான இவர், சிறு வயதில் இருந்தே, கவிதை எழுதுவதில் ஆர்வமாக உள்ளார். தினமலர் வாரமலரில் வெளிவந்த கவிதைகள் இவருக்கு கவிதை எழுதுவதில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தற்போது இவர் ஹைக்கூ கவிதை எழுதிவருகிறார். "பிடிமண்' என்ற 65 பக்க ஹைக்கூ கவிதை புத்தகம் வெளியிட்டுள்ளார். கிராமத்து நிகழ்வுகளை சிறுகதையாக எழுதி வருகிறார். தொடர்ந்து தனது பயணம் தொடரும் என்கிறார். கவிதை கேட்க:9942616296.
தேனி மாவட்டத்தில் மேலும் பல எழுத்தாளர்கள் பல தளங்களில் இயங்கி வருகின்றனர். அனைவருக்கும் வாழ்த்து சொல்வோம்...

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X