மதுரையில் மீண்டும் 12 மணி நேர "மின்வெட்டு':இரவு முழுவதும் கொசுக்கடியால் தூக்கம் போச்சு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2013
02:35

மதுரை : மதுரையில் மீண்டும் இரவு, பகல் என அறிவிக்கப்படாத 12 மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. இரவில் கொசுக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் முதலாவது அலகு, வடசென்னை அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டாவது அலகு, வல்லூர் அனல் மின் நிலையத்தில் 500 மெவாட் மின் உற்பத்தி செய்யும் அலகு ஆகியவற்றில் மின் உற்பத்தி நடக்கவில்லை.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில் கிடைக்கும் 885 மெகாவாட் மின் உற்பத்தி மற்றும் எரிவாயு திட்டம் மூலம் 135 மெகாவாட் மின் உற்பத்தியும் தடைபட்டுள்ளது. கைகொடுத்து வந்த காற்றாலை மின் உற்பத்தியின் சீசன் நவம்பர் முதல் வாரத்துடன் முடிவுக்கு வந்தது. அடுத்த சீசன் 2014 ஜூன் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் இருந்து துவங்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 10,500 மெகாவாட் மின்சாரம் தேவை. தற்போது 8,570 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. 1,930 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் சீராக இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், மதுரையில் இரவு, பகல் என மீண்டும் அறிவிக்கப்படாத 12 மணி நேர மின் வெட்டு நிலவுகிறது. இரவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் கொசுத்தொல்லை அதிகளவு உள்ளது. தூக்கமின்றி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குமுறும் நுகர்வோர்:
ஜெயலட்சுமி, கீரைத்துறை: மதுரை நகரில் நேற்று முன்தினம் அதிகாலை 5 முதல் காலை 6, காலை 10 - பகல் 12, மதியம் 3 - மாலை 6, இரவு 7 - 8, இரவு 9 - 10, என மின் வெட்டு இருந்தது. இரவில் ஒரு மணிக்கு இடையே 30 முதல் 45 நிமிடங்கள் மின் வெட்டு விடிய, விடிய இருந்தது. கொசுக்கடியால் தூக்கமில்லை. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து விட்டது.
ராஜ்குமார், ஐராவதநல்லூர்: தீபாவளி முடிந்ததும் மின் வெட்டு படிப்படியாக அதிகரித்து, தற்போது 10 முதல் 12 மணி நேரம் வரை நீடித்துள்ளது. இது மேலும் பல மணி நேரம் நீடிக்கும் என்கின்றனர். அனல், நீர் மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறுகளை துரிதமாக சரிசெய்து மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதுராமச்சந்திரன், முன்னாள் ராணுவவீரர், பழங்காநத்தம்: மின் வெட்டால் எந்த வேலையும் நடக்கவில்லை. குடியிருப்புகளில் தொட்டிகளில் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்ப இயலவில்லை. மின் வெட்டு நேரத்தில் கொசுக்கடி அதிகளவு இருப்பதால் தூக்கம் இல்லை. குழந்தைகள், முதியோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு செல்வோர் படும்பாடு சொல்லி மாளாது. இவ்வாறு கூறினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X