| 'ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கிறார்' வைர வியாபாரியின் சகோதரி புகார் Dinamalar
'ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கிறார்' வைர வியாபாரியின் சகோதரி புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 டிச
2013
22:39

சென்னை:நடிகை ராதாவின் பெயரைச் சொல்லி, அக்ரம் கானின் அடியாட்கள், ஒரு கோடி ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுப்பதாக, பைசூலின் சகோதரி மரியம் பீவி போலீசில் புகார் அளித்தார்.
'சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்த, நாயகி ராதா, பைசூல் என்ற வைர வியாபாரி மீது பரபரப்பு புகார் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் மீது, போதை பொருள் கடத்தல் புகார் தரப்பட்டது.
இதற்கிடையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று, பைசூலின் சகோதரி மரியம் பீவி புகார் அளித்தார். அதன் விவரம்:
தாயாரின் மறைவுக்கு பிறகு, சகோதரிகள் ஜரினா, லக்சூரியா, சகோதரர் முஜிப் ரகுமானுடன், மற்றொரு சகோதரரான பைசூலின் வீட்டில் வசிக்கிறோம். அவர் மீது, உண்மைக்கு மாறாக, போதை பொருள் கடத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம், இரவு 8:30 மணிக்கு, எங்களது வீட்டிற்கு வந்த, அக்ரம் கானின் ஆதரவாளர்கள், 'உங்கள் தூண்டுதலின் பேரில்தான் நடிகை ராதா புகார் அளித்துள்ளார். அதையும் சேர்த்து, நாங்கள் அளித்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லை என்றால், இரண்டு நாட்களில், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மறுத்தால், குடும்பத்துடன் கொன்று விடுவோம்' என, மிரட்டிச் சென்றனர். மேலும், திருவல்லிக்கேணி பகுதியில், பைசூல் குறித்து அவதுாறு விளம்பரங்களும் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து நடிகை ராதா கூறியதாவது:
பைசூல் என்னுடன், 2008ம் ஆண்டு முதல், ரகசியமாக குடும்பம் நடத்தியது, மரியம் பீவி உட்பட அனைவருக்கும் தெரியும். பைசூல், என் எதிர்காலத்தை சீரழித்து, கருவை கலைத்து, மூளைச்சலவை செய்து, 50 லட்சம் ரூபாயை அபகரித்து சென்றார்.
நகையை அடகு வைத்து சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கும் நான், பணம் கொடுத்து மிரட்டுகிறேன் என்பதில் துளியளவும் உண்மை இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
அக்ரம் கான் கூறுகையில், ''பைசூல் குறித்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால், பொய் புகார் கொடுத்துள்ளார். அதை சட்டப்படி சந்திப்போம்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X