கோவை : கோவை கோட்டத்துக்கு 32 புதிய பஸ்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.
கோவை
- மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள, கோவை கோட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று
நடந்த பஸ் துவக்க விழாவில் மேயர் வேலுச்சாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள்
பங்கேற்றனர். காணொளி காட்சியில் முதல்வர் பஸ்களை துவக்கி வைத்ததாக,
தொலைபேசியில் வந்த தகவலையடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் இனிப்புகளை வழங்கினர்.
அதன் பின் ஒவ்வொரு பஸ்ஸாக புறப்பட்டு வழித்தடத்தில் இயங்கத்துவங்கின.
காணொளி
காட்சிக்காக கோவை கோட்ட அரசுப்போக்குவரத்து தலைமையகத்தில் எந்த சிறப்பு
ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், காணொளிகாட்சியை பார்க்க ஆவலாக வந்த
டிரைவர்கள், கண்டக்டர்கள் ஏமாற்றமடைந்தனர். கோவை கோட்டத்தில் கோவைக்கு 13,
ஊட்டிக்கு 7, திருப்பூருக்கு 3, ஈரோட்டுக்கு 9 என்று மொத்தம் 32 பஸ்கள்
நேற்று இயங்கத்துவங்கின. கோவை நகருக்கு ஒதுக்கிய பஸ்களில் கோவையிலிருந்து
தேனி, கம்பம், தொண்டி, ஒசூர், கூடலூர், புதுக்கோட்டை ஆகிய மார்க்கத்துக்கு
புதிய பஸ்கள் இயக்கப்பட்டன. உள்ளூரில் இயங்கும் வகையில் நான்கு புதிய டவுன்
பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.