சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ஜன., 6 முதல் சிறப்பு பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2013
22:54

கோவை : சமூக அறிவியல் பாடத்தில் மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர்களுக்கு புவியியல் வரைபடத்திறன் குறித்த சிறப்பு பயிற்சி மாநில அளவில் ஜன., 6ம் தேதி துவங்குகின்றது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு "அறிவோம் அகிலத்தை ' என்ற தலைப்பில் புவியியல் வரை
படத்திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சிகள் மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாணவர்களும் புவியியல் வரைபடம் சார்ந்த விபரங்களை அறிந்திருப்பது
அவசியம். இதன் மூலம் தேர்வுகளில் கணிசமான மதிப்பெண்களை எளிதாக பெற இயலும். இதன் காரணமாகவும், ஆசிரியர்களின் புவியியல் வரைபடத்திறன் மேம்படுத்துவதுடன், எளிதாக கற்பித்தல் சார்ந்த பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, மாநில அளவில், ஜன., 6, 7ம் தேதி இரண்டு நாட்கள் முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும். பின், 9, 10ம் தேதி மாவட்ட அளவிலும், 20 முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் ஒன்றிய அளவிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
முதல்கட்ட பயிற்சிக்கு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணி புரியும் ஒரு புவியியல் அல்லது வரலாறு விரிவுரையாளர்கள், புவியியல் அல்லது வரலாறு வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் உட்பட ஒரு மாவட்டத்துக்கு இரண்டு பேர் வீதம், மாநிலம் முழுவதும் 60 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் புலமை, செயல்பாடுகளில் ஆர்வம், சிறந்த கருத்தாளர்களாக செயலாற்றிய அனுபவம் கொண்ட கருத்தாளர்களை தேர்வு செய்து, பயிற்சிக்கு அனுப்பும்படி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X