பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் திரும்புகிறது :அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2014
21:52

திருவள்ளூர் : மாவட்டத்தில், புதிய முயற்சியாக, பாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தருமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று, காட்டு யானம். ஏழு அடி உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும், நெல் மணிகள், கொத்து, கொத்தாக விளையும் ரகம்.
திருவாலங்காடு ஒன்றியம், ராமாபுரம் கிராமத்தில், ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில், விவசாயி பாரதி என்பவர், காட்டு யானம் நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார்.
10 மடங்கு லாபம்
l ஒரு ஏக்கருக்கு, ஒன்றரை கிலோ விதை நெல் போதுமானது.
l வயலில் விதைத்த, 18 நாட்களில், நாற்று தயாராகி விடும்.
l நாற்றை, ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும்.
l 165 நாளில், பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும்.
l உரம் தேவையில்லை என்பதால், அதிக செலவு இருக்காது.
l ஒரு ஏக்கருக்கு, 20 - 25 மூட்டை நெல் கிடைக்கும்.
l இதில், சராசரியாக, 1000 கிலோ அரிசி கிடைக்கும்.
l சந்தையில், ஒரு கிலோ அரிசி 150 ரூபாய்.
l ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
l ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.
இந்த காட்டு யானம் நெல் ரகம் குறித்து, விவசாயி பாரதி கூறுகையில், ''நமது மூதாதையர்களால் பயிரிடப்பட்டு வந்த, பாரம்பரிய நெல் ரகம் இது. களையெடுக்க வேண்டாம். மழை, வெள்ளம் மற்றும், வறட்சியை தாங்கி வளரும். நெற்பயிரின் இலை, தண்டுப் பகுதி மிகவும் வீரிய வளர்ச்சியுடன் உள்ளதால், பூச்சி, நோய் தாக்குதல் இல்லை,'' என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ''மண்வளம், நீர் வளத்துடன், நம் உடல் நலத்தையும், காக்கும் வலிமையுடையது. காட்டு யானம் நெல் ரகம் எளிதில் ஜீரணமாகக் கூடியது. இது, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, மலச்சிக்கல், நரம்புகளை பலப்படுத்துதல் போன்ற, மருத்துவ குணம் கொண்டது,''என்றார்.
வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவு
கடந்த, 24ம் தேதி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு, விவசாயி பாரதி, காட்டு யானம் நெல் பயிருடன் வந்தார். அவரிடம் விவரங்களை கேட்டறிந்த, ஆட்சியர் வீர ராகவ ராவ், வியப்படைந்தார்.
மேலும், இந்த நெல் ரகம் குறித்து, ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து கொடுக்குமாறு, வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X