'பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்க'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2014
02:25

கோவை : ''விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்'' என, வேளாண் பல்கலை பயிர் மேளாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசினார்.கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுனத்தில் மண் பரிசோதனை குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசியதாவது:
தமிழகத்தில் காலங்காலமாக இயற்கை முறை விவசாயத்தைதான் நம் விவசாயிகள் செய்து வந்தனர். 1950ம் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மூலம் 50 மில்லியன் டன்கள் உணவு உற்பத்தி செய்யப்பட்டது.
1960ம் ஆண்டுகளுக்கு பிறகு, மக்கள் தொகையில் எண்ணிக்கை அதிகரித்ததால், உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், விஞ்ஞான முறைகளை பின்பற்றி விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதிக அளவில் ரசாயன உரமங்களை பயன்படுத்தியதால், மகசூல் அதிகம் கிடைத்தது. தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விட்டன.
இனி விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நல்லது என, வேளாண் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் 10 மில்லியன் எக்டர்கள் நிலங்கள் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய பயன்படாமல் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் எக்டர் நிலம் மண் வளம் பாதிக்கப்பட்டு உள்ளன. இனி வரும் காலங்களில் விவசாய நிலங்களுக்கு உரமாக ஆடு, மாடுகளின் சானம் மற்றும் தாவர உரங்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது.
இதில், பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. முன்பு விவசாய தொழிலுக்கு கால்நடைகளை பயன்படுத்தியதால் அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டன. இப்போது நவீன கருவிகளை பயன்படுத்துவதால், அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. அதனால் கால்நடை எருக்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதோடு, பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.
இவ்வாறு, வேலாயுதம் பேசினார். வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார், ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் ரகுநாத், வன நில பயன்பாடு மற்றும் பருவநிலை மாற்ற துறைத்தலைவர் பிரசாதந்த், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சூரியபிரபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X