கொய்யாவில் கூடுதல் சாகுபடி செய்ய முயற்சி : அடர் நடவில் அசத்தும் விவசாயிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2014
03:36

விழுப்புரம் :கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, கூடுதல் மகசூல் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
ஏழைகளின் ஆப்பிள், வெப்ப மண்டலங்களின் ஆப்பிள் என கொய்யாப் பழம் அழைக்கப்படுகிறது. ஆண்டிற்கு இரு முறை காய்க்கும் தன்மை கொய்யாவிற்கு உண்டு. மா, வாழை, ஆரஞ்சு மற்றும் ஆப்பிளுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கொய்யா உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச் சத்துக்கள் ஆய்வு நிறுவனம், 14 வகையான பழங்களை ஆய்வு செய்த போது, நோய் எதிர்ப்பு காரணியான ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதாக கொய்யாப்பழம் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக விளைச்சல்
கொய்யாப் பழத்தில் மனிதர்களுக்கு தேவையான நார்சத்து அதிகம் உள்ளது. பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் லைக்கோபின் ஆகியன மற்ற பழங்களை விட, இதில் அதிகம் உள்ளது. இருப்பினும் மற்ற பழங்களை விட கொய்யாப் பழம் விழுப்பரம் மாவட்டத்தில் அதிகம் விளைவதால், குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
கொய்யாவின் முக்கியத்துவம் மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதால், பலரும் ஆர்வமாக வாங்கிச் சாப்பிடுகின்றனர். இதனால் தற்போது மக்களிடம் கொய்யாப் பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. அடர் நடவுஇதனால் பழைய முறைப்படி கொய்யா சாகுபடி செய்த விவசாயிகள், பல புதிய முறைகளை கையாண்டு சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். புதிய விவசாயிகள் பலரும் கொய்ய சாகுபடியில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் பலர் பழைய முறைப்படி 6 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்று நட்டு பராமரிப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும் தற்போது அடர் நடவு முறையில், 3 மீட்டர் இடைவெளியில் கொய்யா கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்கின்றனர். இதனால் இரட்டிப்பு அளவு மகசூல் கிடைக்கிறது. இரட்டிப்பு லாபம் அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்வதால் களையெடுத்தல், உரமிடுதல் போன்ற பணிக்கு ஆட்களின் தேவை குறைக்கப்படுகிறது. வரிசைகளுக்கு இடையே ஊடு பயிராக மணிலா, உளுந்து மற்றும் காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் கொய்யா மரங்கள் மூலமும், ஊடு பயிர்கள் மூலமும் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது.
ஆனால் பழைய முறைப்படி, வளர்ந்துள்ள கொய்யாச் செடிகளின் நுனிப் பகுதியை வளைத்து, அதில் மணல் பைகளை கட்டி, புதிய தளிர்களை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இம்முறையில் புதிய தளிர்கள் குறைந்தளவே உருவாகின்றன. இதனால் செடிகளுக்கு உரமிடல், சூரிய வெளிச்சம் போன்றவை குறைவாகவே கிடைப்பதால், மகசூலும் குறைகிறது. மேலும் பழைய முறையை கையாளும் வயல்களில் ஊடு பயிர்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை.
எனவே புதிய முறைப்படி அடர் நடவு முறையை மேற்கொண்டு, வளர்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும். இதனால் பல இடங்களில் புதிய தளிர்கள் துளிர் விட்டு, அதிக பூக்கள் வைப்பதால், கூடுதல் மகசூல் கிடைக்கிறது. ஜனவரி அல்லது ஜூன் மாதங்களில் கவாத்து செய்வது நல்லது.
நடவு செய்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பராமரித்தால், மற்ற ஆண்டுகளில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்பதால், அடர் நடவில் காவத்து செய்வதில் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X