கற்பழிக்க முயன்ற அக்கா கணவரை கழுத்தறுத்து கொன்ற கல்லூரி மாணவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2014
01:57



மாதவரம்:கற்பழிக்க முயன்ற, அக்காவின் கணவரை, கழுத்தை அறுத்து கல்லூரி மாணவி, கொலை செய்த சம்பவம், மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மாதவரம் பால்பண்ணை, டெலிபோன் காலனி, 1வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர், மேத்யூ பினுராஜ், 32. அண்ணா நகரில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி, ஹேமா, 26. அவர்களுக்கு, ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான்.

பலமுறை முயற்சி

ஹேமாவின், தாயார், லில்லி மற்றும் தங்கை சுபா, 23, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரும், பினுராஜின் வீட்டில் உடன் தங்கி இருந்தனர். சுபா, பெரம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், பி.காம்., இறுதியாண்டு படித்து வருகிறார். தன் வீட்டில் தங்கிஇருக்கும் சுபாவை, தன் வலையில் வீழ்த்த, பினுராஜ் பலமுறை முயன்று உள்ளார்.

தடுத்தும் பலனில்லைஇந்த நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு 2:00 மணிக்கு, மது போதையில், வீடு திரும்பிய பினுராஜ், சுபாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோர், அவரது வெறிச்செயலை தடுத்தனர். ஆனால், அவர்களை அடித்து, வீட்டிற்கு வெளியில் தள்ளி, கதவை உள்பக்கம் தாழிட்டார்.அதன்பின், சமையலறையில் பதுங்கி இருந்த சுபாவை கற்பழிக்க முயன்றார். அக்கா கணவரிடம் இருந்து, தன்னை காப்பாற்றி கொள்ள துணிந்த சுபா, அந்த அறையில் இருந்த பெரிய கத்தியால், பினுராஜின் தலையில்

பலமாக அடித்தார். அதில், பினுராஜ் மயங்கி விழுந்தார். ஆத்திரம் தணியாத சுபா, பினுராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.தகவல் அறிந்த, மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பினுராஜின் உடலை மீட்டனர். கொலை தொடர்பாக, சுபாவை கைது செய்தனர். கற்பழிக்க முயன்ற அக்கா கணவரை, கொழுந்தியாள் கொன்ற சம்பவம், மாதவரம் பால்பண்ணை பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
02-பிப்-201410:46:54 IST Report Abuse
Matt P காந்தியடிகளே ...பெண்களை யாரேனும் கற்பழிக்க முயற்சித்தால் ஆயுதங்கள் இல்லாவிட்டால் பற்களையும் நகங்களையும் ஆயதங்கள் ஆக்குங்கள் என்று கூறியிருக்கிறார். .......ஆண்களே .....மனைவியின் உடன்பிறப்புகளை உடன்பிறவா சகோதரியாக நினையுங்கள்... ...சட்டப்படி அவர்கள் உங்கள் சகோதரிகள் ...சிஸ்டர்-இன்-லா ...மனதாலே எல்லோரையும் நேசித்து கட்டுப்பாடோடு வாழ்க்கையை அனுபவிப்பது தானே வாழ்க்கையாக இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X