'விவசாயிகள் தென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் கவனம் தேவை'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2014
02:32

ஆனைமலை : “தென்னை விவசாயிகள் தங்களின் நீர் வசதிக்கு ஏற்ற ரகங்களையும், அதிக காய்ப்பு தன்மையுள்ள செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களை பயிரிட்டு பலனடைய வேண்டும்,” என விதை ஆய்வு துணை இயக்குனர் நடேசன் கூறினார்.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு , உடுமலை தாலுகாக்கள் மற்றும் ஆனைமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. இதில் தமிழகத்தின் தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், ஆண்டுதோறும் புதிதாக சுமார் 200 ஏக்கர் பரப்பளவுக்கு புதிதாக தென்னங்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. விதை ஆய்வு துணை இயக்குனர் பொன்னுசாமி நடேசன் கூறியதாவது: நீண்டகால பயிரான தென்னையில், நெட்டை, நெட்டை-குட்டை மற்றும் குட்டை - நெட்டை என பல ரகங்கள் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் வறட்சியை தாங்கும் நெட்டை ரகங்களான அரசம்பட்டி நெட்டை ரகங்களை பயிரிடலாம்.
தண்ணீர் நிறைவாக நிலங்களிலும், ஆற்று படுகைகளில் உள்ள நிலங்களிலும்,நெட்டை-குட்டை மற்றும் குட்டை-நெட்டை ரகங்களை பயிரிடலாம்.
இது தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்திக்கு ஏற்றவையாகும். தற்போது விவசாயிகளிடையே இயற்கையான மகரந்த சேர்க்கை அல்லது கட்டுபாடான செயற்கை மகரந்த சேர்க்கை செய்யப்பட்ட ஒட்டு கன்றுகளில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் நிலவுகிறது.
இயற்கை முறையில் மகரந்த ஒட்டு சேர்க்கப்பட்ட குட்டை-நெட்டை ஒட்டுகளில் காய்க்கும் தன்மையிலும், காய்களிலும் பெரியளவில் வேறுபாடு இருக்கும்.
காய் எந்த நிறத்தில் இருக்கும், எந்த அளவில் இருக்கும் என்பது காய்த்த பின்புதான் தெரிய வரும். ஆனால் செயற்கை முறையில் ஒட்டு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகள் கிட்டதட்ட 90 சதவீதம் காய்கள் ஒரே தரமாக இருக்கும்.
மரத்திற்கு மரம் காய்களின் உருவத்திலும் அளவிலும் வேறுபாடு இருக்காது.
காய்ப்புத்தன்மையும் சீராக இருக்கும். எனவே செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளை மட்டுமே வாங்கி நடவு மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஒட்டு கன்றுகள் வாங்கும்பொழுது அதன் தாய்,தந்தை மரத்தின் காய்ப்பு தன்னையை தெரிந்து வாங்க வேண்டும். நெட்டைரக கன்றுகள் வாங்கும் பொழுது அதன் தாய் மர தேர்வு நன்றாக செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொண்டு வாங்கி நடவு மேற்கொண்டால் பிற்காலத்தில் நல்ல தோப்பு அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X