மக்கள் ஏமாளிகள் அல்ல: கருணாநிதிக்கு ஜெ., பதில்
Added : மார் 10, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை : 'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான்' என, கருணாநிதி கூறியதற்கு, நாகர்கோவில், பிரசாரத்தில் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ''கருணாநிதியின் பேச்சை, இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு, தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,'' என்றும் தெரிவித்தார். கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில், பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா, பேசியதாவது:முஸ்லிம்களுக்கு, இட ஒதுக்கீடு அளித்தது, தி.மு.க., தான் என, கருணாநிதி கூறி உள்ளார். 2006ல், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து, அதில் சமூக மற்றும் கல்வியில், பின் தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை, முதன் முதலாக சேர்த்ததே, அ.தி.மு.க., அரசு தான்.
இதுதான் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டிற்கு, அடித்தளமாக, வித்தாக அமைந்தது.
கருணாநிதி, தன் கேள்வி-பதில் அறிக்கையில், 'இட ஒதுக்கீடு சதவீதத்தை, அதிகப்படுத்த வேண்டும் என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதைப்பற்றி உண்மையிலே அக்கறை இருந்தால், அந்த கோப்பினை, உடனே வரவழைத்து, ஆணை பிறப்பித்திருக்கலாம்' எனக் கூறியிருக்கிறார். இப்படித்தான், அவர் ஆணை பிறப்பித்தாரா? நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில், திருத்தி அமைக்கப்பட்ட, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட, ஆய்வு எல்லையில், அ.தி.மு.க., அரசு, 2006ல் தெரிவித்த, இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை, கருணாநிதி, ஏன் வார்த்தை மாற்றாமல் சேர்த்தார்? தி.மு.க., 2006ல் ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டதை போல, உடனே அதற்குரிய சட்டத்தை இயற்ற வேண்டியதுதானே? அதை ஏன் செய்யவில்லை? எதற்காக, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை, அவர் கேட்டார்? ஏனெனில், சட்டப்படி, அவ்வாறு தான் செய்ய முடியும்.மண்டல் கமிஷன் வழக்கில், 1990ல், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பின் அடிப்படையில், எந்த இட ஒதுக்கீடு குறித்தும், எந்த அரசும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பிறகே, அதை நடைமுறைப்படுத்த முடியும்.அதே அடிப்படையில், தற்போது, இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற, முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraj - Coimbatore,இந்தியா
10-மார்-201408:36:09 IST Report Abuse
jayaraj மக்கள் ஏமாளிகள் அல்ல...கோமாளிகள். அதனால் தான் மாறி மாறி நீங்க ரெண்டு பேரு சொல்றதை நம்பி கை தட்டிக்கொண்டே இருக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X